பருத்தி விவசாயிகள் கவனத்துக்கு..

திருவாரூர் மாவட்டத்தில் பருத்தி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தொழில்நுட்பங்களை கடைபிடித்து கூடுதல் மகசூல் பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

  • தற்போது மாறி வரும் தட்ப வெப்ப நிலை காரணமாக பருத்தி பயிரில் ஆங்காங்கே பூ உதிர்தல் காணப்படுகிறது. வாடல் நோய் மற்றும் சாறு உறிஞ்சும் பூச்சிகளின் தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே கீழ்குறிப்பிட்டு ள்ள ஆலோசனைகளை அறிந்து பருத்தி விவசாயிகள் பயன் பெறலாம்.
  • பருத்தியில் இலைகளில் சிகப்பு நிறமாக மாறின அறிகுறிகள் தென்பட்டால் இலைவழித்தெ ளிப்பானாக ஏக்கருக்கு 2 கிலோ மக்னீசியம் சல்பேட் மற்றும் 1 கிலோ யூரியா ஆகிய உரங் களை 200 லிட்டாó நீரில் கலந்து கரைசலை காய் பிடிக்கும் தருணத்தில் தெளிக்கவும். நுனி வளாச்சியைக் கட்டுப்படுத்த 75-80 நாட்களில் 15 வது கணுவை விட்டு நுனியை கிள்ளி விடுவதால் (நுனி கிள்ளுதல்) அதிகப்படியான பக்க கிளைகள் உருவாகி காய் பிடிக்கும் தன்மையை அதிகாக்கின்றது.
  • தற்போது பெய்த மழையினால் பருத்தியில் ஆங்காங்கே வாடல் மற்றும் வோó அழுகல் நோய் தாக்கக் கூடும். இதைக் கட்டுப்படுத்த 1 கிராம் கார்பன்டசிம் 1 லிட்டா தண்ணீருக்கு என்ற அளவில் கலந்து வேரினை சுற்றி பாதிக்கப்பட்ட செடிகளிலும், அருகிலுள்ள செடிகளிலும் ஊற்ற வேண்டும்.
  • சாறு உறிஞ்சும் பூச்சிகளான தத்துப் பூச்சி, அசுவிணி, இலைப்பேன் மற்றும் வெளóளை ஈக்க ளின் தாக்குதலுக்கு வாய்ப்புள்ளது. வெளóளை ஈக்களை கட்டுப்படுத்த தாக்கப்பட்ட இலை மற்றும் செடிகளை அழிக்க வேண்டும். இந்த வெளளை ஈக்கள் மாற்று உணவுச் செடிகளான களைகளில் அதிகமாக காணப்படுவதால் களைகளை அகற்றி வயலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
  • பூச்சிகளின் நடமாட்டத்தை மஞ்சள் நிற பசைப் பொறியினை செடிகளுக்கு 1 அடி மேல் வைத்து கவாóந்திழுத்து அழிக்க வேண்டும். தேவைப்பட்டால் வேப்பங்கொட்டை 5 சதம் அல்லது வேப்பெண்ணெய் 2-3 மிலி 1 லிட்டா தண்ணீருக்கு என்றளவில் தெளிக்கலாம்.  கிடைக்குமிடங்களில், மீன் எண்ணெய் சோப் ஒரு கிலோ 40 லிட்டாó நீரில் கரைத்து ஏக்கருக்கு 10 கிலோ தெளிக்கலாம்.
  • இளம் பயிர்களில் சாறு உறிஞ்சும் பூச்சிகளினால் சேதம் அதிகமாகும் போது இமிடாகுளோ பிரிட் 100 மில்லி அல்லது டிரைய்சோபாஸ் 35 இ.சி 600 முதல் 800 மி.லி இவற்றில் ஏதே னும் ஒன்றை ஏக்கருக்கு பயிரின் வளாச்சிக்கு ஏற்றவாறு 500-700 லிட்டா தண்ணீரில் கலந்து தெளித்து பயன்பெறலாம்

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *