மானாவாரி பருத்தி சாகுபடி

  • வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளதால், மதுரை மாவட்டத்தில் மானாவாரி பகுதிகளில் பருத்தி சாகுபடி செய்யலாம், என விவசாயத்துறை அறிவுறுத்தியுள்ளது.
  • மானவாரி பருத்தி ரகங்களான கேசி 2, கேசி 3, எஸ்.வி.பி.ஆர் 2, எஸ்.வி.பி.ஆர்., 4 ரகங்கள் சாகுபடிக்கு ஏற்றவை.
  • மானாவரியில் பருத்தி தனி பயிராகவோ அல்லது கலப்பு பயிராகவோ (பயிறு, சூரியகாந்தி, மக்காசோளம்) சாகுபடி செய்யலாம்.
  • தனிப்பயிராக சாகுபடி செய்யப்படும் போது எஸ்.வி.பி.ஆர்., ரகங்களை 60 * 30 செ.மீ., இடைவெளியிலும் கேசி 2, கேசி 3 ரகங்களுக்கு 45 X 15 செ.மீ., இடைவெளியிலும் ஊடுபயிராக சாகுபடி செய்யப்படும் போது பருத்தி இணைவரிசையில் 30 செ.மீ., இடைவெளியிலும் வரிசைக்கு வரிசையில் 60 செ.மீ., இடைவெளியில் விதைக்க வேண்டும்.
  • பஞ்சு நீக்கப்படாத விதையாக இருந்தால் ஹெக்டருக்கு 20 கிலோ தேவை.
  • அமில விதை நேர்த்தி செய்து பஞ்சு நீக்கிய விதையை புங்கம் இலைக்கரசலில் 8 மணி நேரம் ஊறவைத்து நிழலில் உலர்த்த வேண்டும்.இதனால் வறட்சியிலும் முளைப்புத்திறன் அதிகரிப்பதோடு நல்ல வளர்ச்சி கிடைக்கும்.
  • அதிக விளைச்சலை பெற ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறையை பின்பற்றி பூச்சிகளின் தாக்குதலை கட்டுப்படுத்தலாம், என விநாயகபுரம் நீர் மேலாண்மை பயிற்சி நிலைய வேளாண்மைதுணை இயக்குனர் இந்திராகாந்தி, உதவி இயக்குனர் உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளனர்.

நன்றி: தினமலர்

பசுமை தமிழகம் மொபைல் ஆப் இங்கே டவுன்லோட் செய்யவும்

Related Posts

பருத்தியில் இயற்கை வழி பூச்சி மேலாண்மை... பருத்தியில் இயற்கை வழி பூச்சி மேலாண்மை வழிகளை பார்...
பருத்தியில் வேர் அழுகல் நோயினைக் கட்டுப்படுத்தும் வழிகள்... அறிகுறிகள்பருத்தியில் வேர் அழுகல் நோயானது விதை ...
பருத்தியில் இலைவழி உரம்  பருத்தி செடி முளைத்து சுமார் 30 நாட்களான இளம் ...
பருத்தியில் பூச்சி மேலாண்மை பருத்தியில் இயற்கை முறை பூச்சி கட்டுப்பாடு வழிகளை ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *