மானாவாரி பருத்தி தொழில்நுட்பங்கள்

மானாவாரி பருத்தி சாகுபடியாளர்கள் விதைக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய சில தொழில்நுட்பங்கள் குறித்து வேளாண் விஞ்ஞானி யோசனை தெரிவித்துள்ளனர்.

பருத்தியில் வேரழுகல் நோய், வாடல் நோய், இலைக் கருகல் நோய் என பல்வேறு நோய்கள் விதை மூலம் தாக்குகின்றன. பூசண வித்துக்கள் விதையின் மேல் மற்றும் உட்புறம் தங்கியிருக்கின்றன. விதை முளைக்கும்போது பூசண வித்துகளும் முளைத்து நோயினை உண்டாக்கி சேதம் விளைவிக்கின்றன.

தடுக்கும் முறைகள்

  • விதை மூலம் பரவும் நோய்களைத் தடுக்க விதை நேர்த்தி செய்வது அவசியம்.
  • பருத்தி விதைக்கும் முன்னர் விதை நேர்த்தி செய்தல் அவசியம். ஒரு கிலோ விதைக்கு பத்து கிராம் வீதம் சூடோமோனாஸ் புளுரசன்ஸ் என்ற உயிரியல் காரணி கொண்டு விதைப்பதற்கு சற்று முன்னர் விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
  • சம வயதுள்ள ரகத்தை யாவரும் தேர்ந்தெடுத்து ஏக காலத்தில் (ஒரு வாரத்திற்குள்) விதைத்திட வேண்டும்.
  • வயலைச் சுற்றிலும் உள்ள பூச்சிகளுக்கு மாற்றுணவாகப் பயன்படும் செடிகள், களைகளை அகற்றிச் சுத்தமாக வைக்க வேண்டும்.
  • தொழுஉரம் மற்றும் வேப்பம் பிண்ணாக்கு இடுவது பூச்சி மற்றும் நோய்த்தாக்குதலைக் குறைத்தும், (வேரழுகல், வாடல், நூற்புழு, தண்டுக்கூன் வண்டு, தரைக்கூன் வண்டு, வேர்ப்புழு).
  • நன்மை தரும் பூச்சியான பொறிவண்டுகளின் பெருக்கத்திற்கு ஊடுபயிராக தட்டைப்பயிறு பயிரிட வேண்டும்.
  • ஓரப்பயிராக ஆமணக்கு பயிரிட வேண்டும். அதன் மூலம் புரடீனியாப் புழுக்களின் தாக்குதலைக் கட்டுப்படுத்த முடியும்.புரடீனியாப் புழுக்களின் தாய் விந்துகளைக் கவர்ந்து முட்டையிட வைக்கும். முட்டைகளும், இளம் புழுக்களும் உள்ள ஆமணக்கு இலைகளை பறித்து அழிக்க வேண்டும்.
  • கிரைசோப்பா, குளவிகள் போன்ற நன்மை தரும் பூச்சிகள் பெருக்கத்திற்காக ஊடுபயிராக 20 சால் பருத்திக்கு ஒரு சால் மக்காச்சோளம் பயிரிட வேண்டும்.

மேற்கூரிய தொழில் நுட்பங்களை மானாவாரி பருத்தி விதைக்கும் போது உழவர்கள் கடைப்பிடிக்குமாறு திருவில்லிபுத்தூர் பருத்தி ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் முருகேசன் கேட்டுக் கொள்கிறார்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *