குறைந்த செலவில் நிறைந்த லாபம் தரும் பரங்கி!

பரங்கி சாகுபடி செய்து, லாபம் ஈட்டி வரும் லட்சுமி தனது அனுபவங்களை கூறுகிறார் :

  • தஞ்சாவூர் அடுத்த கண்டியூர், என் சொந்த ஊர். பரங்கிக் கொடி, எல்லா வகை மண்ணிலும், எந்த சூழலையும் தாங்கி வளரக் கூடியது.
  • இருந்தாலும், களிமண் மற்றும் வண்டல் மண்ணில், அதிக மகசூல் கொடுக்கும்.எந்த வகை மண்ணாக இருந்த போதும், நன்கு உழவு செய்து, வயலில் தண்ணீர் தேங்காத வகையில் சமப்படுத்த வேண்டும். இல்லை யெனில், மழை பெய்யும் போது தண்ணீர் தேங்கி, பரங்கிக் கொடிகள் அழுகி விடும்.
  • வயலை சமப்படுத்தி உழவு செய்த பின், 5க்கு 5 அடி இடைவெளி இருக்கும் வகையில் விதைக்குழிகள் அமைத்து, ஒரு விதைக்குழிக்கு ஐந்து விதைகள் ஊன்றலாம்.
  • விதை ஊன்றிய பின், நன்கு கொடி படர ஆரம்பிக்கும் வரை, குறைவான தண்ணீரும், பிறகு கொஞ்சம் அதிக அளவில் தண்ணீரும் பாய்ச்சலாம்.
  • கொடிகள் காற்றில் உடைந்து விடாமல், கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். விதைத்த நாளிலிருந்து, 70 நாட்களுக்கு பின் காய்களை அறுவடை செய்யலாம்.
  • பரங்கிக்காய் நம்முடைய நாட்டுக்காய் என்பதால், தண்ணீர் இருந்தாலும் வளரும்; தண்ணீர் இல்லாத போதும், எவ்வளவு முடியுமோ அவ்வளவு வறட்சியை தாங்கி, நல்ல மகசூல் கொடுக்கும்.
  • அதேபோல், இதற்கு உரச் செலவோ, பராமரிப்புக்கு ஆள் செலவோ கிடையாது.விவசாயியே நேரடியாக பராமரிப்பு செய்யலாம்.
  • பரங்கிக்கு ஊடுபயிராக, வெள்ளரியை பயிர் செய்யலாம். அதாவது, பரங்கி விதை ஊன்றிய, 10 நாட்களுக்கு பின், வெள்ளரி விதையை ஊன்றலாம்.
  • பரங்கிக் கொடி, நீண்ட துாரம் படரும் தன்மை கொண்டது. ஆனால் வெள்ளரி, விதைக்குழியின் அருகிலேயே படரும் தன்மை கொண்டது.அதனால் இரண்டை யும் இணைத்து பயிரிட்டால், நல்ல லாபம் கிடைக்கும் என்பது நிச்சயம்.
  • பரங்கியும், வெள்ளரி யும் கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் அறுவடைக்கு வரும் என்பதால், அறுவடை செலவும் குறையும்.
  • பரங்கிக்காய் அல்வா செய்யப் பயன்படுவதால், வெளிமாநிலங்களில் அதற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. அதுமட்டுமின்றி, சீக்கிரம் வீணாகாது என்பதால், நம் ஊர் ஓட்டல்களிலும் பரங்கிக்காய்க்கு நல்ல வரவேற்பு உள்ளது.
  • பெரும்பாலும் வியா பாரிகள், வயலுக்கு வந்து பரங்கி, வெள்ளரியை வாங்கி செல்கின்றனர்.ஒரு ஏக்கர் நிலத்தில் பரங்கி, வெள்ளரி பயிரிட்டதன் மூலம், 50 ஆயிரம் ரூபாய் வரை லாபம் கிடைத்தது. மூன்று மாத கால பயிரான இதில், குறைந்த செலவில், நிறைந்த லாபம் கிடைப்பது நிச்சயம்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *