பழக்கன்றுகள் விற்பனைக்குத் தயார்

பல்வேறு ரகப் பழக்கன்றுகள் நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் விற்பனைக்குத் தயாராக வைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து அந்த நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் பா.மோகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

  • நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் சாத்துக்கொடி, கமலா ஆரஞ்சு, நாரத்தை, எலுமிச்சை ஒட்டு ரகம், பலா (ரகம் – பாலூர் பலா), மாதுளை (ரகம் – கணேஷ், பகுவா), கொய்யா (ரகம் – லக்னெü 49), சீமை இலந்தை, அத்தி, மா (ரகங்கள் – அல்போன்சா, நீலம், சேலம், பெங்களூரா) ஆகிய பழக்கன்றுகள் நடவு செய்து விற்பனைக்குத் தயாராக உள்ளன.
  • தவிர, காய்கறி விதைகளான தக்காளி, புடலை, பாகல், பூசணி, பரங்கி, சிறுகீரை, தண்டுக்கீரை, செடி முருங்கை, செடி அவரை விதைகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
  • நடவு செய்ய விருப்பமுள்ள விவசாயிகள் நாமக்கல் மோகனூர் சாலையிலுள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில் முழுத் தொகையைச் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.
  • மேலும் விவரங்களுக்கு: 04286266345, 0428266244, 0428266650 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

நன்றி: தினமணி 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “பழக்கன்றுகள் விற்பனைக்குத் தயார்

  1. Rajiv says:

    என் பெயர் ராஜீவ் நான் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாலுகா சின்னோவுலபுரம் கிராமம் எனக்கு பாலூர் பழக் கன்றுகள் 100 செடி வேண்டும் நான் எவ்வாறு தங்களிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *