பழக்கன்றுகள் விற்பனைக்குத் தயார்

பல்வேறு ரகப் பழக்கன்றுகள் நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் விற்பனைக்குத் தயாராக வைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து அந்த நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் பா.மோகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

  • நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் சாத்துக்கொடி, கமலா ஆரஞ்சு, நாரத்தை, எலுமிச்சை ஒட்டு ரகம், பலா (ரகம் – பாலூர் பலா), மாதுளை (ரகம் – கணேஷ், பகுவா), கொய்யா (ரகம் – லக்னெü 49), சீமை இலந்தை, அத்தி, மா (ரகங்கள் – அல்போன்சா, நீலம், சேலம், பெங்களூரா) ஆகிய பழக்கன்றுகள் நடவு செய்து விற்பனைக்குத் தயாராக உள்ளன.
  • தவிர, காய்கறி விதைகளான தக்காளி, புடலை, பாகல், பூசணி, பரங்கி, சிறுகீரை, தண்டுக்கீரை, செடி முருங்கை, செடி அவரை விதைகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
  • நடவு செய்ய விருப்பமுள்ள விவசாயிகள் நாமக்கல் மோகனூர் சாலையிலுள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில் முழுத் தொகையைச் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.
  • மேலும் விவரங்களுக்கு: 04286266345, 0428266244, 0428266650 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

நன்றி: தினமணி 

Related Posts

கவாத்து செய்த பழமரங்களில் போட்டோ பசை பூசுதல்... பழ மரங்களை ஒவ்வொரு ஆண்டும் ஒருமுறை கவாத்து செய்வத...
கடலோர பகுதிக்கேற்ற பழமரங்கள் தமிழகத்தில் கடற்கரைப் பகுதிகளில் காணப்படும் மண், வ...
கிர்ணி பழ சாகுபடி தற்போது நல்லாத்தூர் உட்பட பல பகுதிகளில் கிர்ணி பழம...
சேலம் மாவட்டத்தில் மாவு பூச்சி... சில ஆண்டுகளாக செடி, கொடி, மரங்களை மாவு பூச்சிகள் த...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *