சொட்டுநீர் பாசன டிப்ஸ்

“சொட்டு நீர் பாசன முறையை பயன்படுத்தும் விவசாயிகள், முறையாக பயன்படுத்த வேண்டும்’ என, ராசிபுரம் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் மோகன் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட அறிக்கை:

  • சொட்டுநீர் பாசன முறை விவசாயிகள், நீர் பாய்ச்சுவதற்கு முன், டிஸ்க் வடிகட்டியை கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
  • மெயின் பைப், சப்மெயின் பைப், பக்கவாட்டு குழாய்களை, 15 நாட்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்ய வேண்டும்.
  • உபகரணத்தில் உள்ள வடிகட்டியின் இன்லெட் மற்றும் அவுட்லெட், சப்மெயின், பக்கவாட்டு குழாயின் இறுதியில் தேவையான அழுத்தம் உள்ளதா என பார்க்க வேண்டும்.
  • உபகரணத்தை மண்ணின் ஈரப்பதம் மற்றும் பயிரின் நீர் தேவைக்கேற்ப இயக்க வேண்டும்.
  • உப்பு மற்றும் பாசனத்தினால், டிரிப்பரில் அடைப்பு ஏற்படாமல் இருக்க பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • நீண்ட நாட்கள் இயக்க தேவையில்லாத போதும் கூட உபகரணத்தை இயக்க வேண்டும்.
  • ஒவ்வொரு முறையும், உரம் மற்றும் அமில சிகிச்சை முடிந்து, 15 முதல், 30 நிமிடம் நீர் பாசனம் செய்ய வேண்டும்.
  • தண்ணீரில் கரையக்கூடிய உரத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
  • மண்ணுக்கு அடியில் அமைக்கப்பட்ட சொட்டுநீர் பாசனமெனில், தினந்தோறும் குறிப்பிட்ட அழுத்தத்தில் இயக்க வேண்டும்.

நன்றி: தினமலர்

பசுமை தமிழகம் மொபைல் ஆப் இங்கே டவுன்லோட் செய்யவும்

Related Posts

சொட்டுநீர் பாசன முறையில் எலுமிச்சை சாகுபடி!... சத்தி காளிதிம்பம் மலைக் கிராம மக்கள் வித்திய...
சொட்டு நீர்ப்பாசனம் முறையின் மேன்மைகள்... குறைந்த அளவு தண்ணீரைக் கொண்டு கூடுதல் மகசூல் பெற ச...
சொட்டுநீர் பாசன பராமரிப்பு சொட்டு நீர் பாசனம் அமைப்பது குறித்து, விவசாயிகளிடம...
கரும்புக்கு சொட்டு நீர் பாசனம்... கரும்பு பயிருக்கு சொட்டு நீர் பாசனம் அமைப்பதன் அவச...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *