தெளிப்பான் முறையில் நீர்ப்பாய்ச்சி சாகுபடி

தெளிப்பான் முறையில் சின்ன வெங்காயப் பயிருக்கு நீர்ப்பாய்ச்சுவதன் மூலம் காலநேரம்,மின்சாரம், தண்ணீர் உள்ளிட்ட வளங்களைச் சேமித்து வருகிறார் இயற்கை வேளாண்மையில் ஈடுபட்டுள்ள பட்டதாரி இளைஞர் ந. திருநாவுக்கரசு.பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டத்துக்குள்பட்ட இரூர் கிராமத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு முதுநிலை பட்டப் படிப்பு (எம்.சி.ஏ) முடித்து,அவருக்குச் சொந்தமான நிலத்தில் சின்ன வெங்காயப் பயிருக்கு நீர்த்தெளிப்பான் முறையில் நீர்ப்பாய்ச்சி வரும் அவர் மேலும் கூறியது:

neerthelippan

  • பெரம்பலூர் மாவட்டத்தில் அண்மைக்காலமாக போதிய மழை இல்லாததால் சின்ன வெங்காயம் பயிரிடப்பட்டுள்ள பெரும்பாலான விவசாய நிலங்களில் பயிர்கள் காய்ந்து கருகி வருகின்றன.
  • இதைத் தவிர்க்கும் வகையில், எனது ஒரு ஏக்கர் பரப்பளவில் முன்னோட்டமாக ரூ. 40 ஆயிரம் மதிப்பில் நீர்த்தெளிப்பான் கருவிகள் மூலம் வெங்காயப் பயிர்களுக்கு நீர்ப்பாய்ச்சி வருகிறேன்.
  • சொட்டுநீர் அல்லது வரப்புகள் மூலம் ஒரு ஏக்கர் நிலத்துக்கு நீர் பாய்ச்ச வேண்டுமெனில் சுமார் 6 மணி நேரமாகும். ஆனால், நீர்த்தெளிப்பான் முறையில் 3 மணிநேரமே போதுமானது.
  • ஒரு ஏக்கருக்கு 100 நீர்தெளிப்பான் கருவிகள் பொருத்தியுள்ளதால், அனைத்து இடங்களிலும் நீர்ப்பாய்ச்ச முடிகிறது.
  • இதன் மூலம் காலநேரம்,மின்சாரம் ஆகியவை சேமிக்கப்படுவதோடு,தண்ணீர் வீணாவது தடுக்கப்படுகிறது.
  • சொட்டுநீர்ப் பாசன முறையைப் போல், நீர்த்தெளிப்பான் முறைக்கும் வேளாண் துறையினர் மான்யம் வழங்கினால் விவசாயிகள் பெரிதும் பயனடைவர் என்றார் அவர்.
  • சின்ன வெங்காய உற்பத்தியில் பெரம்பலூர் மாவட்டம் 23% சாகுபடி செய்து மாநிலத்திலேயே முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: தினமணி

Related Posts

பாசன நீர் ஆய்வு அவசியம் "விவசாயத்தில் மகசூலை அதிகரிக்க, பாசன நீர் ஆய்வு செ...
கரும்புக்கு சொட்டு நீர் பாசனம்... கரும்பு பயிருக்கு சொட்டு நீர் பாசனம் அமைப்பதன் அவச...
ஒருமணி நேரத்தில் 20,000 லிட்டர் நீர் இறைக்கும் கைவிசை இயந்திரம்!... திருவாரூர் மாவட்டம் நன்னிலத் தைச் சேர்ந்தவர் விவசா...
வறட்சியால் சொட்டுநீர் பாசனத்திற்கு மாறும் விவசாயிகள்... பருவமழை 2 ஆண்டுகளாக பொய்த்து நிலத்தடி நீர்மட்டம...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *