பாசன நீரின் தன்மைக்கு ஏற்ப பயிர்சாகுபடி

மண்வளம் பாதிக்கப்படாமல் பாசன நீரின் தன்மைக்கு ஏற்ப பயிர்சாகுபடி செய்து பயன் பெற விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து செய்யாறு வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் க.செல்வராஜீ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பாதாவது:

உப்புத் தன்மை மற்றும் கார்தன்மை உள்ள பாசன நீரை விவசாயிகள் தொடர்ந்து பயன்படுத்து வருதால் மண்வளம் பாதிப்பதோடு விளைச்சலும் குறைய வாய்ப்புள்ளது.

மேலும், விவசாயிகள் சொட்டுநீர் மற்றும் தெளிப்பு நீர் பாசன கருவிகளை பயன்படுத்தி வருவதால் உப்புத் தன்மையுள்ள நீரால் பாசன கருவிகள் குறுகிய காலத்திலே பாதிப்படைய அதிக வாய்ப்புள்ளது.

இதுப் போன்றக் காரணங்களால் பராமரிப்பு செலவும் அதிகமாக்கூடும்.

மேற்படி குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் விவசாயிகள் தங்கள் நிலங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வரும் பாசன நீரை பரிசோதனை செய்து மண்வளம் பாதிக்கப்படாமல் நீரின் தன்மைக்கேற்ப பயிர் செய்வது விவசாயிகளுக்கு பெரும் பயனை அளிக்ககூடியதாகும்.

மாதிரி பாசன நீரை எடுப்பதற்கு சுத்தமான கண்ணாடி பாட்டில் அல்லது பிளாஸ்டிக் பாட்டிலை பயன்படுத்த வேணடும்.

கிணறு, ஆழ்துளை கிணறுகளில் இருந்து நீரின் மாதிரி சேகரிக்கும் பொழுது பம்புசெட்டிலிருந்து 10 முதல் 30 நிமிடம் வரை நீர் வெளியேறிய பின்னர் நீர் மாதிரியை சேகரித்தல் நல்லது.

பின்னர் ஆய்வுக்கு அனுப்பி பரிசோதனையின் ரிசல்ட்டின் படி வேளாண்மைத் துறையினர் தெரிவிக்கும் தகவல்படி விவசாயத்தில் ஈடுபட்டால் மண்வளம் பாதுகாக்கப்படுவதுடன், தேவையான அளவுக்கு விளைச்சல் கிடைக்க வாய்ப்புள்ளது.

மேலும் இது குறித்த தகவல்களை அறிய விரும்பும் விவசாயிகள் தங்கள் வட்டாரப் பகுதியில் உள்ள களப் பணியாளர்களை தொடர்புக் கொள்ளலாம் என தெரிவித்து உள்ளார்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *