தரிசுநிலத்தில் புளி சாகுபடி

ரகங்கள்: பிகேஎம்1, உரிகம், தும்கூர் மற்றும் ஹாசனூர்

மண் மற்றும் தட்பவெப்பநிலை:

 • மணல் கலந்த மண் இதன் வளர்ச்சிக்கு மிகவும் உகந்தது.
 • வெப்பம் மற்றும் வறட்சியைத் தாங்கி வளரும்.
 • சராசரி மழை அளவு வருடத்திற்கு 500 முதல் 1500 செ.மீ. வரை போதுமானது.
 • மானாவாரியாகப் பயிர் செய்ய ஏற்ற பயிர் ஆகும்.
 • பருவம்: ஜூன் – டிசம்பர்
 • இனப்பெருக்கம்: விதை, ஒட்டுக்கட்டிய செடிகள் மற்றும் மொட்டுக்கட்டுதல

நடவு:

 • 1 மீட்டர் நீளம், அகலம், ஆழம் உள்ள குழிகள் எடுக்க வேண்டும்.
 • குழிகளில் மேல் மண்ணோடு தொழு உரத்தைக் கலந்து குழிகளில் மத்தியில் செடிகளை நடவேண்டும்.
 • ஒவ்வொரு குழிக்கும் 1.3 சதவீதம் லிண்டேன் மருந்து 50 கிராம் தூவ வேண்டும்.
 • செடிகளை நட்டவுடன் கன்றுகளைக் காற்றிலிருந்து பாதுகாக்க குச்சிகளை ஊன்றி கட்டிவிட வேண்டும்.

நீர்ப்பாசனம்:

 • கன்றுகள் நன்கு துளிர்த்து வளரும் வரை நீர் பாய்ச்ச வேண்டும்.

அறுவடை:

 • நான்காவது வருடத்திலிருந்து காய்க்க ஆரம்பித்தாலும் ஒன்பதாவது வருடத்தில்தான் நல்ல மகசூல் கிடைக்கும்.
 • பழங்களை ஒவ்வொரு வருடத்திலும் ஏப்ரல்-மே மாதங்களில் அறுவடை செய்யலாம்.

மகசூல்:

 • ஒரு வருடத்திற்கு ஒரு மரத்திலிருந்து 150-200 கிலோ.
 • இதன் அடிப்படையில் தரிசு நிலத்தில் புளி சாகுபடி ஒரு லாபகரமான தொழிலாகும்.

தொடர்புக்கு: எம்.அகமது கபீர், வேளாண்மை ஆலோசகர்,
அக்ரி கிளினிக்,268/77, பழைய ஹவுசிங் யூனிட், எல்லீஸ் நகர் போஸ்ட், தாராபுரம்-638 657. அலைபேசி எண்:093607 48542.

நன்றி: தினமலர்

பசுமை தமிழகம் மொபைல் ஆப் இங்கே டவுன்லோட் செய்யவும்

Related Posts

புளியம் பழத்தை அதிக நாட்கள் கெட்டுப் போகாமல் சேமிப்பது எப்படி... 'புளியம் பழத்தை அதிக நாட்கள் கெட்டுப் போகாமல் சேமி...
நேரடி புளி விற்பனையில் விவசாயிகளுக்கு ஆதாயம்... திண்டுக்கல்லில், ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் புளிச...
புளியில் மேல் ஓடு பிரிக்கும் இயந்திரம்... அறுவடை செய்ய பட்ட புளியில் 25-30% வரை மேல் ஓடு இரு...
சுவை மிகுந்த குமரி புளி விலை உயர்வு... கன்னியாகுமரி மாவட்டத்தில் விளைச்சல் பாதிப்படைந்துள...

3 thoughts on “தரிசுநிலத்தில் புளி சாகுபடி

 1. gugan says:

  என்னுடைய புளியமரம் நன்றாக பூக்கிறது ஆனால் காய்ப்பது இல்லை என்ன செய்யலாம் ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *