புளி சாகுபடி

புளி இரகங்கள் :

 • பிகேஎம். 1, உரிகம், தும்கூர் மற்றும் ஹாசனூர்.

மண் மற்றும் தட்பவெப்பநிலை :

 • மணல் கலந்த மண்  இதன் வளர்ச்சிக்கு மிகவம் உகந்தது. வெப்பம் மற்றும் வறட்சியைத் தாங்கி வளரும்.
 • சராசரி மழை அளவு வருடத்திற்கு 500 முதல் 1500 செ.மீ வரை போதுமானது, மானாவாரியாகப் பயிர் செய்ய ஏற்ற பயிர் ஆகும்.

பருவம் : ஜுன்  – டிசம்பர்

விதையும் விதைப்பும்

இனப்பெருக்கம் : விதை, ஒட்டுக்கட்டிய செடிகள் மற்றும் மொட்டுக்கட்டுதல்.

இடைவெளி : 8-10 x 8-10 செ.மீ

நடவு :

 • 1 மீட்டர் நீளம், அகலம், ஆழம் உள்ள குழிகள் எடுக்கவேண்டும்.
 • குழிகளில் மேல் மண்ணோடு தொழு உரத்தைக் கலந்து குழிகளின் மத்தியில் செடிகளை நடவேண்டும்.
 • ஒவ்வொரு குழிக்கும் 1.3 சதவீதம் லிண்டேன் மருந்து 50 கிராம் தூவவேண்டும்.
 • செடிகளை நட்டவுடன் கன்றுகளைக் காற்றிலிருந்து பாதுகாக்க குச்சிகளை ஊன்றிக் கட்டிவிடவேண்டும்.

நீர் நிர்வாகம்

 • கன்றுகள் நன்கு துளிர்த்து வளரும் வரை நீர்ப்பாய்ச்சவேண்டும்.

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை

 • மானாவாரிப் பயிராக பயிரிடப்படுவதால் வழக்கமாக உரமிடுவது இல்லை. இருந்தாலும் அங்கக உரங்களை இட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

களைக் கட்டுப்பாடு மற்றும் பின்செய்நேர்த்தி

 • செடிகளின் ஒட்டுக்கு அடிப்பாகத்தில் தோன்றும் வேர்க்குச்சியின் துளிர்களை அவ்வப்போது அகற்றிவிடவேண்டும்.
 • மற்றும் காய்ந்த நோய் தாக்கிய குச்சிகளையும் அகற்றவேண்டும்.

ஊடுபயிர் :

 • கன்றுகள் வளர்ந்து விளைச்சலுக்கு வரும் வரை முதல் 4 ஆண்டுகளில் ஊடுபயிர்களைப் பயிர் செய்யலாம்.

ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு

 • இலைத்தின்னும் புழு :எண்டோசல்பான் அல்லது மோனோகுரோட்டோபாஸ் 2 மில்லி 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டும்.
 • சாம்பல் நோய் : இந்நோயைக் கட்டுப்படுத்த டைனோகாப் 1 கிராம் மருந்தை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டும்.

அறுவடை

 • நான்காவது வருடத்திலிருந்து காய்க்க ஆரம்பித்தாலும் ஒன்பதாவது வருடத்தில் தான் நல்ல மகசூல் கிடைக்கும்.
 • பழங்களை ஒவ்வொரு வருடத்திலும் ஏப்ரல் – மே மாதங்களில் அறுவடை செய்யலாம்.
 • மகசூல் : ஒரு வருடத்திற்கு ஒரு மரத்திலிருந்து 150-200 கிலோ.

நன்றி: தமிழ் நாடு வேளாண்மை பல்கலை கழகம்

Related Posts

தரிசு நிலத்தில் லாபம் தரும் சோற்றுக்கற்றாழை...  திருநெல்வேலி மாவட்டம்,பாவூர்சத்திரம் பகுதியில்...
பர்மா தேக்கை சாகுபடி செய்யும் வாலிபர்: ஊடு பயிராக வாழையும் சாகுபடி... விவசாய நிலத்தில்,பர்மா தேக்கை நடவு செய்து, பராமரித...
கருணை கிழங்கு சாகுபடி! மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் ஒரு போக நெல் ச...
வறண்ட பூமியில் துளசி சாகுபடி சிவகங்கை அருகே துளசி விவசாயத்தில் மாதம் ரூ.30 ஆயிர...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *