வாழை வயலில் ஊடுபயிராக பூசணி

சத்தியமங்கலம் பகுதியில் வாழை வயலில் நடப்பட்டுள்ள பூசணி, தற்போது அறுவடையாகி வருகிறது.

 • சத்தியமங்கலம் பகுதியில் விவசாயிகள், பத்தாயிரம் ஏக்கருக்கு மேல் வாழை பயிரிட்டுள்ளனர். இதில் செவ்வாழை மற்றும் கதளி ஆகிய ரக வாழைகளுக்கு முக்கியதுவம் கொடுக்கப்படுகிறது.
 • இந்த ரகவாழைகள் ஏக்கர் ஒன்றுக்கு செவ்வாழை, 800 வாழை கன்றுகளும், கதளி ஏக்கர் ஒன்றுக்கு, 1,200 வாழை கன்றுகளும் நடப்படுகிறது.
 • ஒவ்வொரு வாழை கன்றுகளுக்கு இடையே செவ்வாழை எட்டு அடி இடைவெளியும், கதளி ரகத்திற்கு ஆறு அடி இடைவெளியும் விடப்படுகிறது.
 • இந்த இடைவெளியில் புற்கள் முளைத்து விடுகிறது. இந்த புற்களை அகற்றவே வாழை விவசாயிகள் அதிகமாக செலவு செய்ய வேண்டியுள்ளது.இந்த இடைவெளியில் புற்கள் முளைக்கப்படுவதை தடுக்க களைக்கொள்ளி மருந்தும் தெளிக்கின்றனர்
 • ஆனால் தற்போது விவசாயிகள் இந்த இடைவெளியில் ஊடுபயிர் நடவு செய்து, இதில் கூடுதலாக மற்றொரு வருமானத்தை பெருக்கி வருகின்றனர்.
 • இதில் தற்போது நல்ல வருமானம் தரும் ஊடுபயிர் பூசணி ஆகும். வாழை கன்று நடவு செய்யப்பட்ட பின் பத்து மாதங்கள் கழித்து பலன் கொடுக்கிறது.
 • இதற்குள் இயற்கை சீற்றமாக சூறாவளி காற்று வந்தால் வாழை விவசாயிகள் கதி மோசமாகிவிடும் என்பது குறிப்பிடதக்கது.
 • ஆனால் இதன் இடைவெளியில் பயிரிடப்படும் பூசணி பயிர் நடவு செய்யப்பட்ட நாளில் இருந்து, 80 வது நாளில் இருந்து பலன் கொடுக்கிறது.
 • தற்போது சத்தியமங்கலம் பகுதியில் வாழை வயலில் ஊடுபயிராக நடவு செய்யப்பட்ட பூசணி அறுவடையாகி வருகிறது. ஏக்கர் ஒன்றுக்கு, 20 டன் முதல், 30 டன் வரை ஊடுபயிரான பூசணி விளைச்சல் கொடுக்கிறது
 • பூசணி செடி படர்ந்து வளர்வதால் வாழை வயலில் புற்கள் முளைப்பதில்லை.
 • ஊடுபயிரான பூசணி காய் பிடித்த காலத்தில் இருந்து மூன்று மாதங்கள் வரை பலன்கொடுக்கிறது.
 • மண் வளம் குறைவாக இருந்தால், பலன் கொடுப்பது இரண்டு மாதங்களாக குறையும்.
 • இது குறித்து வாழை விவசாயிகள் கூறும்போது, ஊடுபயிராக பூசணி பயிரிடுவதால் பெரும்பலான வாழையின் பராமரிப்பு செலவு குறைகிறது.

பூசணி விலை அதிகரித்தால் வாழைக்கு மேல் விவசாயிகளுக்கு பூசணியில் லாபம் கிடைக்கும், என்றனர்.

நன்றி: யாஹூ/தினமலர்

Related Posts

முப்போகம் பலன் தரும் திசு வாழை... விவசாயத்தை பெரிதாக நினைத்து வாழ்ந்த விவசாயிகள் எல்...
வாழையில் ஊடுபயிராக செண்டுமல்லி!... கோபி சுற்று வட்டாரத்தில் கிணற்று பாசனத்தில் வாழ...
வாழையைத் தாக்கும் காய்ப்பேன் வாழைக்காய்களை இரண்டு வகையான காய்ப்பேன்கள் தாக்குகி...
தொடர் மழையில் இருந்து வாழையை காப்பது எப்படி?... தொடர் மழையால் பெருக்கெடுத்த தண்ணீர் தங்கி நிற்பதால...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *