தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லிகள் நிலைமை

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பாசுமதி அரிசி அமெரிக்காவில் கடந்த 3 ஆண்டுகளில் 444 தடவை நிராகரிக்க பட்டுள்ளது. காரணம் தெரியுமா? தடை செய்ய பட்ட ரசாயன பூச்சி மருந்துகள் அளவுக்கு அதிகமாக இருந்ததே.

வெளிநாடுகளில் இப்படி ரசாயன பூச்சி மருந்து இருப்பதை கண்டு பிடிக்க பரிசோதனை சாலைகள் உள்ளன. இங்கே?

உணவில் மட்டும் இல்லை, விவசாயிகள் அளவுக்கு அதிகமாகவும் தேவை இல்லாமலும் பூச்சி மருந்துகள் தெளிக்கின்றனர். தெளிக்கும் போது சரியான பாதுகாப்பு இல்லாமல் தெளிப்பதால் அவர்களுக்கே பல நோய்கள் வருகின்றன. அளவுக்கு அதிகம் தெளிப்பதால் நிலத்தடி நீர் மாசு படுகிறது.

வெளிநாடுகளில் பூச்சிக்கொல்லி எப்படி பாதுகாப்போடு தெளிக்கிறார்கள்!
நம் நாட்டில் எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாமல் தெளிக்கிறார்கள்

 

இந்தியாவிற்கே உணவு அளிக்கும் பஞ்சாபில் வருட வருடம் 100 விவசாயிகள் பூச்சி மருந்தை முகர்ந்து இறக்கின்றனர். நம் நாட்டில் ரசாயன பூச்சி கொல்லி உபயோகம் வருடத்திற்கு வருடம் அதிகரித்து வருகிறது. இவை மிகவும் சக்தி வாய்ந்த ரசாயனங்கள்

இதில் இன்னொரு அநியாயம் என்ன என்றால், உலகலாவில் தடை செய்யப்பட மிக அதிக சக்தி வாய்ந்த பூச்சிக்கொல்லிகள் இங்கே விற்பனை செய்ய அனுமதி இருப்பதே. கடந்த 15 ஆண்டுகளாக பல முயற்சி செய்தும், சக்தி வாய்ந்த பூச்சி கொல்லி தயாரிப்பாளர்கள் முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர்.

மத்திய அரசு அனுபம் வர்மா என்பவரை தலைமையாக கொண்ட குழுவை அமைத்தது. இந்த குழுவின் பரிந்துரை படி, வெளிநாட்டில் தடை செய்யப்பட்டு இந்தியாவில் விற்பனை செய்யப்படும் 66 ரசாயன பூச்சிக்கொல்லிகள் உள்ளன.

அவற்றால் 18ஐ அனுமதி செய்யவும், 2018 ஆண்டில் 27ஐ பரிசீலனை செய்யவும், 2020 ஆண்டில் 6 ஐ தயாரிப்பு நிறுத்தவும், உடனடியாக 15ஐ தடை செய்யவும் பரிந்துரை செய்தது. மத்திய அரசு இதை பற்றி எந்த முடிவும் எடுக்கவில்லை. இது உச்ச கோர்ட்டில் விஜரணைக்கு வந்து முடிவு எடுக்க காத்திருக்கிறது.

 

மேலும் விவரங்களுக்கு  – Tribune, Times of india

 

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *