பயிர்ப்பூச்சி கட்டுப்பாட்டில் பவேரிய பேசியானா பூசணம்:

  •  பவேரிய பேசியானா பூசணம்  (Beauveria bassiana) எல்லா மண் வகைகளிலும் காணப்படுகிறது.
  • பூசணத்தின் வித்துக்கள் பூச்சி, புழுக்களின் மேல் பட்டவுடன் சாதகமான சூழ்நிலையில் அவை முளைத்து பூசண இழைகளைத் தோற்றுவிக்கின்றன.
  • இப்பூசணம் நொதிப் பொருட்களை உற்பத்தி செய்து மேற்புற தோலினை சிதைத்து பூச்சியின் உடலுக்குள் ஊடுருவிவிடுகிறது. அங்கு நச்சுப்பொருளை உற்பத்தி செய்து பூச்சியின் வயிற்றில் உள்ள பாக்டீரியாவை எளிதில் அழித்து, பூசணம் உடல் முழுவதும் வளர்ந்து பரவி பூச்சியைச் செயலிழக்கச் செய்து கொன்றுவிடுகிறது.
  • இப்பூசணம் மக்காச்சோள பயிரில் உட்சென்று நீர் உறிஞ்சும் குழாய்களில் தங்கி தாவர உட்பூசணமாகச் செயல்பட்டு இப்பயிரினைத் தாக்கும் தண்டு துளைப்பான்களை சிறப்பான முறையில் கட்டுப் படுத்துவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
  • நன்மை செய்யும் இப்பூசணம் வணிக ரீதியில் பல்வேறு பெயர்களில் கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது.
  • தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், தாவர நோயியல் துறையில் இப்பூசணம் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது. ஒரு கிலோ விலை ரூ.100.
  • துகள் வடிவில் வழங்கப்படும் இப்பூசணத்தை மண்வழியாகவும், இலை வழியாகவும் பயிர்களுக்கு பயன்படுத்தலாம்.
  • ஒரு ஏக்கருக்கு ஒரு கிலோ என்ற அளவில் 20 கிலோ மக்கிய தொழு உரத்துடன் கலந்து விதைக்கும் முன் மண்ணில் இடவேண்டும்.
  • இலையை உண்ணும் புழுக்கள், சாறு உறிஞ்சும் பூச்சிகள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த ஒரு லிட்ட ருக்கு 10 கிராம் என்ற அளவில் கலந்து தெளிக்கவும்.

(தகவல்: த.தினகரன், கோ.அர்ச்சுணன், வானொலி உழவர் சங்க செய்திக்கதிர், அக்டோபர் 2011) -டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.

நன்றி: தினமலர்

பவேரிய பேசியானா பற்றி மேலும் தெரிந்து கொள்ள:  http://en.wikipedia.org/wiki/Beauveria_bassiana

 

பசுமை தமிழகம் மொபைல் ஆப் இங்கே டவுன்லோட் செய்யவும்

Related Posts

இயற்கை வழியில் பூச்சிகளை அழிக்கும் முறை... அளவுக்கதிகமான பூச்சி மருந்துகளைப் பயன்படுத்தி சுற்...
பெவேரியா பேசியானா கட்டுபடுத்தும் பூச்சிகள்... ரசாயன பூச்சிக் கொல்லிகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்...
இயற்கை முறை கத்திரி சாகுபடி கத்திரி பயிரிக்குதான், எல்லா காய்கறி பயிர்களை விட ...

One thought on “பயிர்ப்பூச்சி கட்டுப்பாட்டில் பவேரிய பேசியானா பூசணம்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *