மாவுப் பூச்சியைக் கட்டுப்படுத்தும் ஒட்டுண்ணிகள்

மாவு பூச்சியை பற்றியும், அதனை கட்டுபடுத்த ஒட்டுண்ணி அறிமுக படுத்த பட்டதை பற்றியும் முன்பே படித்தோம். இந்த ஒட்டுண்ணி எப்படி வேலை செய்கிறது என்று தெரிந்து கொள்ளலாம்

 • மரவள்ளி, பப்பாளி, கொய்யா, கத்தரி, கோகோ, பழப்பயிர்கள், மலர்செடிகள், தேக்கு போன்ற பல்வேறு தோட்டக்கலை பயிர்களை பப்பாளி மாவுப்பூச்சி பெருமளவு தாக்கி சேதப்படுத்துகிறது.
 • வெப்பம் அதிகரிக்கும்போது, மாவுப்பூச்சியால் சேதமும் அதிகரிக்கும்.
 • பல்வேறு பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளித்தும், மாவுப்பூச்சியை முழுமையாக கட்டுப்படுத்த முடியாது.
 • பப்பாளி மாவுப்பூச்சி குறுகிய வளர்ச்சி காலமும், பூச்சியின் அதிக இனப்பெருக்கத்திறனும், இப்பூச்சிகளின் மேல் பாதுகாப்பு கவசம் போல இருக்கும் வெண்மைநிற மாவு போன்ற பொருளும் இதற்கு காரணம்.
 • இம்மாவுப்பூச்சியை உயிரியல் முறையில் நிரந்தரமாக கட்டுப்படுத்த அமெரிக்கா நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒட்டுண்ணி, “அசிரோபேகஸ் பப்பாயே’ தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் பவானிசாகர் ஆராய்ச்சி நிலையத்தில் உற்பத்தி செய்து, விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.
 • சென்னிமலை வட்டாரத்தில் கடந்த பத்தாம் தேதி நான்கு விவசாயிகளின் மரவள்ளிப்பயிரில் ஒட்டுண்ணி வெளியிடப்பட்டது.
 • இந்த ஒட்டுண்ணிகள் மாவுப்பூச்சி சேதமுள்ள வயல்வெளியில் வெளியிட்டவுடன், மாவுப்பூச்சிகளை சுறுசுறுப்பாக தேடிச்சென்று முட்டையிடும்.
 • ஒரு பெண் ஒட்டுண்ணி 50 முதல் 60 முட்டைகளை இடும். இந்த முட்டைகளில் இருந்து வெளிவரும் ஒட்டுண்ணிகள் உடன் பப்பாளி மாவுப்பூச்சியை தாக்க துவங்கும்.
 • ஒட்டுண்ணிகளின் வாழ்நாள் 16 முதல் 22 நாட்களில் முடிந்துவிடும்.வளர்ந்த ஒட்டுண்ணிகளின் ஆயுள் ஐந்து முதல் ஆறு நாட்களாகும்.
 • மாவுப்பூச்சிகளின் சேதத்தை பொறுத்து, பாதிக்கப்பட்ட வயலில் 100 ஒட்டுண்ணிகள் விடப்படுகின்றன. குறுகிய கால இனப்பெருக்கம் ஏற்படுவதால், ஒரு வயலுக்கு ஒரு முறைவிட்டால் போதுமானதாகும்.
 • ஒட்டுண்ணிகள் தானாக பெருகி பெருமளவில் மாவுப்பூச்சிகளை அழித்துவிடும்.
 • ஒட்டுண்ணிகளால் பாதிக்கப்பட்ட மாவுப்பூச்சிகள் கருமை நிறமாக மாறி இறந்து இருப்பதை பார்க்க முடியும்.
 • ஒட்டுண்ணி விடப்பட்ட 15 நாட்களில் ஒரு இலையில் ஆறு முதல் 32 ஒட்டுண்ணி வரை ஓடிக் கொண்டிருப்பதை பார்க்க முடியும்.
 • இவை மற்ற நன்மை செய்யும் பூச்சிகளுக்கு கெடுதல் செய்வதில்லை.
 • ஒட்டுண்ணிகள் விட்ட வயல்வெளியில் பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி மருந்துகள் தெளிக்கக்கூடாது

சென்னிமலை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.

தொடர்பிற்கு:
Agricultural Research Station
Bhavanisagar  638 451
Erode District, Tamil Nadu
தொலைபேசி எண்: 04295 240032  04295 240244

நன்றி: தினமலர்

பசுமை தமிழகம் மொபைல் ஆப் இங்கே டவுன்லோட் செய்யவும்

Related Posts

மாவுப்பூச்சியைக் கட்டுப்படுத்த ஒட்டுண்ணி இலவசம்... பல வகை பயிர்களை தாக்கும் மாவு பூச்சியை பற்றியும் அ...
மாவுப் பூச்சியைக் கட்டுப்படுத்தும் ஒட்டுண்ணிகள் அறிமுகம்... மாவு பூச்சி என்ற புதிய வில்லனை நாம் ஏற்கனவே படித்த...
புதிய ராட்சசன் – மாவுப்பூச்சி... பயிர்களுக்கும், விவசாயிகளுக்கும் புதிய தலை வலி கொட...
வேகமாக பரவுகிறது மாவுப்பூச்சி, வேளாண் துறை எச்சரிக்கை... தமிழ்நாட்டில் பரவி வரும் மாவு பூச்சி பற்றியும், அத...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *