குழித்தட்டு முறையில் மஞ்சள் நாற்று உற்பத்தி

மஞ்சள் சாகுபடி செய்து வரும் வடிவேல் குழித்தட்டு முறை விளக்குகிறார்.

 • தக்காளி, கத்திரி நாற்றுகளுக்கு பயன்படுத்தும் பிளாஸ்டிக் குழித்தட்டுகளை பயன்படுத்தலாம்.
 • 35 நாட்களில் நாற்றுகளை நடவு செய்யலாம்.
 • பொதுவாக ஏக்கருக்கு 1000 கிலோ விதை மஞ்சள் தேவைப்படும்.
 • குழித்தட்டு முறையில் ஏக்கருக்கு 170 கிலோ விதை மஞ்சள் போதுமானது.
 • அதன்படி விதை மஞ்சளுக்கு ரூ.3400 மற்றும் குழித்தட்டுக்கள், இயற்கை உரம் போன்ற செலவுகளுக்கு 6000 ரூபாய் வரை தான் செலவு.
 • ஆனால் நேரடி விதைப்பில் ரூ.20,000/- வரை செலவாகும்.
 • குழித்தட்டு நாற்றுகளை நிழல் வலை அமைத்துத்தான் உற்பத்தி செய்ய வேண்டும் என்பதில்லை. தோட்டத்தில் உள்ள மர நிழலிலும் வளர்க்கலாம்.
 • ஏக்கருக்கு சுமார் 32 ஆயிரம் நாற்றுகள் தேவைப்படும்.
 • ஒரு செடியில் இருந்து சுமார் 500 கிராம் வரை விளைச்சல் பெற்றுள்ளனர்.
 • அதன்படி ஏக்கருக்கு 45 குவிண்டால் விளைச்சல் கிடைக்கும். நேரடி நடவு முறையில் சுமார் 25 குவிண்டால் அளவுக்குத் தான் கிடைக்கும்.
 • தொடர்புக்கு – போன்: 09944033055

நன்றி: தினமலர் 

பசுமை தமிழகம் மொபைல் ஆப் இங்கே டவுன்லோட் செய்யவும்

Related Posts

திருப்பூரில் புதிய சாகுபடி முறை... திருப்பூரில், ஊடுபயிர், தொடர் பயிர் என வழக்கமான சா...
நஷ்டமில்லாத இயற்கை வேளாண் சாகுபடி... ஒரு பண்ணையாளர் தனது உழைப்புக்கான ஊதியத்தை வரவு செல...
மஞ்சளுடன் ஊடுபயிராய் மிளகாய் மஞ்சளுக்கு ஊடுபயிராய் மிளகாய் பயிரிடுவதில் பவானிசா...
மஞ்சள் செடிகளை பாதுகாக்க ஊடுபயிராக ஆமணக்கு... கள்ளக்குறிச்சியில் மஞ்சள் பயிரின் பாதுகாப்பிற்கு ஆ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *