மஞ்சளுக்கு ஊடுபயிராக வெங்காயம் சாகுபடி

மஞ்சள் விலை வீழ்ச்சியால், கோபி சுற்று வட்டாரத்தில் நடப்பாண்டு மஞ்சள் பரப்பளவு குறைந்துள்ளது.

  • பருவமழை ஏமாற்றம் மற்றும் மஞ்சளுக்கு கூடுதல் விலை கிடைக்காததால், விவசாயிகள் மஞ்சளை பயிரிடாமல் இருந்தனர்.
  • மஞ்சளில் ஊடுபயிராக வெங்காயம் பயிரிட்டால், ஓரளவுக்கு லாபம் கிடைப்பதால், கோபி சுற்று வட்டாரத்தில் மஞ்சள் பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர்.

தடப்பள்ளி பாசனப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:

  • கோபி சுற்று வட்டாரத்தில் அதிகளவில் கரும்பு, மஞ்சள், நெல் பயிரிடப்படுகிறது.
  • சென்ற, 2009ம் ஆண்டில் ஏற்பட்ட மஞ்சள் விலை உயர்வு காரணமாக, கரும்பு விவசாயிகள் பலரும், மஞ்சளுக்கு மாறினர்.
  • மஞ்சள் விலை தொடர்ந்து சரி வடைந்ததால், மஞ்சள் பயிரிட்ட விவசாயிகள் பெரும் ஏமாற்றத்துக்கு ஆளாகினர்.
  • மஞ்சள் விலையை, விவசாயிகளே நிர்ணயம் செய்ய வேண்டும், என கோரிக்கை விடுத்து வருகின்றனர். மஞ்சளுக்கு போதிய விலை கிடைக்காத போதிலும், மஞ்சளில் ஊடுபயிராக வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது.
  • வெங்காயத்தின் விலை நன்றாக இருப்பதால், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படவாய்ப்பில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி: தினமலர் 

 

Related Posts

மஞ்சளில் நுண்ணூட்டச் சத்து குறைபாடு... வணிக ரீதியான பயிரில் மஞ்சள் முக்கியப் பங்கு வகிக்க...
சின்ன வெங்காயம் சாகுபடி டிப்ஸ்... ராசிபுரம் பகுதியில் சின்ன வெங்காயம் பயிரிடும் விவச...
மஞ்சள் பயிரில் அதிக மகசூல் தொழிற்நுட்பங்கள்... மஞ்சள் பயிரில் மகசூல் அதிகரிக்க தொழில் நுட்ப முறைக...
சின்ன வெங்காயத்தில் விதை உற்பத்தி... கோயம்புத்தூர் த.வே.ப.கழக காய்கறித் துறையின் தலைவர்...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *