மஞ்சள் நாற்று நடவு

பொதுவாக மஞ்சள் பயிர் கிழங்கின் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. மஞ்சள் நடவிற்கு விரலி, குண்டு மஞ்சள் பயன்படுகிறது.

 • விதை மஞ்சள் 25 முதல் 30 கிராமிற்கு குறையாமலும் 3 முதல் 4 பரு கொண்டதாகவும் இருக்க வேண்டும்.
 • ஒரு எக்டருக்கு 2000 முதல் 2500 கிலோ விதைமஞ்சள் தேவைப்படுகிறது.
 • பவானி சாகரிலுள்ள வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் விதை கிழங்கிற்குபதிலாக மஞ்சள் நாற்றுகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
 • மஞ்சள் நாற்றை நாம் விதை கிழங்கின் மூலம் சாகுபடி செய்வதைப்போல் சாகுபடி செய்யலாம்.
 • ஒரு ஏக்கருக்கு தேவையான நாற்றுக்களை உற்பத்தி செய்ய 500 கிலோ மஞ்சள் போதுமானது.
 • ஒரு ஏக்கருக்கு நடவு செய்ய 55,000 முதல் 60,000 நாற்றுகள் தேவைப்படுகிறது.
 • விதைக்கிழங்கினை பயன்படுத்தும்போது 80 சதவீதம்தான் முளைப்புத்திறன் இருக்கும். ஆனால் நாற்றுக்களை நடவிற்கு பயன்படுத்துவதால் 98 சதவீதம் பயிர்கள் முளைத்திருக்கும்.
 • நாறறுக்கள் நட்ட 2ம் மாதத்திலேயே கிழங்கு உருவாக ஆரம்பித்துவிடும்.
 • 8ம் மாதத்தில் நன்கு திரட்சியடைந்து 5 முதல் 6 தூர்கள் கொண்ட கிழங்குகள் அறுவடைக்கு தயாராகிவிடும்.
 • மிதமான அளவுக்கு நோய், பூச்சி தாக்குதல் இருக்கும். பொருளாதார சேத நிலையைத் தாண்டும்போது தகுந்த பாதுகாப்பு முறைகளை மேற்கொள்ள வேண்டும்.
 • விதைக்கிழங்கு பயிரிட்டு கிடைக்கும் மகசூலைவிட அதிகபட்சமாக 50 சதவீதம் வரை நாற்றுக்கள் நடுவதன் மூலம் பெறலாம்.

(தகவல்: பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், பவானிசாகர்-638 451, போன்: 04295240244).

நன்றி: தினமலர்

பசுமை தமிழகம் மொபைல் ஆப் இங்கே டவுன்லோட் செய்யவும்

Related Posts

மஞ்சள் பயிரில் இலைப்புள்ளி நோய் கட்டுபடுத்துவது எப்படி?... மஞ்சள் பயிரில் இலைப்புள்ளி நோய்த் தாக்குதல் அதிகமா...
மஞ்சளில் நோய் மேலாண்மை தமிழகத்தில் சேலம், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி...
திருப்பூரில் புதிய சாகுபடி முறை... திருப்பூரில், ஊடுபயிர், தொடர் பயிர் என வழக்கமான சா...
மஞ்சள் பயிருக்கு மேலுரம் மண்ணில் இலைகள், வெளிர் பச்சை, இளம் மஞ்சள் நிறத்துட...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *