மஞ்சள் பயிரில் நுண்சத்துக் குறைபாடு

  • மஞ்சள் பயிரில் நுண்சத்துக் குறைபாடு  நிவர்த்தி செய்ய உரங்களை இலை மூலம் தெளிக்க வேண்டும்.
  • ஒரு ஏக்கருக்கு 6 கிலோ சூப்பர் பாஸ்பேட் உரத்தை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம். தெளிப்பதற்கு முதல் நாள் ஊற வைக்க வேண்டும்.
  • அடுத்த நாள் காலை தெளிந்த நீரை எடுத்து, மேலும் 90 லி தண்ணீர் சேர்த்து கரைசலைத் தயார் செய்யவேண்டும்.
  • அக்கரைசலில் 150 கிராம் பெர்ரஸ் சல்பேட், 150 கிராம் ஜிங்க் சல்பேட், 150 கிராம் போராக்ஸ், 150 கிராம் யூரியா போன்ற நுண் சத்துகள் மற்றும் உரங்களைக் கரைக்க வேண்டும்.
  • பின் அக்கரைசலை ஒரு ஏக்கர் பரப்புக்கு காலை அல்லது மாலை வேளையில் தெளிக்க வேண்டும்.
  • மஞ்சள் நட்ட 30, 60, 90, 120 மற்றும் 150-வது நாள்களில், தலா 22 கிலோ யூரியா மற்றும் 12 கிலோ பொட்டாஷ் உரங்களை மேலுரமாக இடலாம்

இவ்வாறு நாமகிரிப்பேட்டை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் மோகன் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *