மஞ்சள் பயிரில் நுண்சத்துக் குறைபாடு

  • மஞ்சள் பயிரில் நுண்சத்துக் குறைபாடு  நிவர்த்தி செய்ய உரங்களை இலை மூலம் தெளிக்க வேண்டும்.
  • ஒரு ஏக்கருக்கு 6 கிலோ சூப்பர் பாஸ்பேட் உரத்தை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம். தெளிப்பதற்கு முதல் நாள் ஊற வைக்க வேண்டும்.
  • அடுத்த நாள் காலை தெளிந்த நீரை எடுத்து, மேலும் 90 லி தண்ணீர் சேர்த்து கரைசலைத் தயார் செய்யவேண்டும்.
  • அக்கரைசலில் 150 கிராம் பெர்ரஸ் சல்பேட், 150 கிராம் ஜிங்க் சல்பேட், 150 கிராம் போராக்ஸ், 150 கிராம் யூரியா போன்ற நுண் சத்துகள் மற்றும் உரங்களைக் கரைக்க வேண்டும்.
  • பின் அக்கரைசலை ஒரு ஏக்கர் பரப்புக்கு காலை அல்லது மாலை வேளையில் தெளிக்க வேண்டும்.
  • மஞ்சள் நட்ட 30, 60, 90, 120 மற்றும் 150-வது நாள்களில், தலா 22 கிலோ யூரியா மற்றும் 12 கிலோ பொட்டாஷ் உரங்களை மேலுரமாக இடலாம்

இவ்வாறு நாமகிரிப்பேட்டை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் மோகன் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

நன்றி: தினமணி

Related Posts

மஞ்சளில் நோய் மேலாண்மை தமிழகத்தில் சேலம், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி...
மஞ்சள் செடிகளை பாதுகாக்க ஊடுபயிராக ஆமணக்கு... கள்ளக்குறிச்சியில் மஞ்சள் பயிரின் பாதுகாப்பிற்கு ஆ...
மஞ்சள் கிழங்கில் அழுகல் நோய் தடுப்பது எப்படி?... மஞ்சள் கிழங்கில் அழுகல் நோய் தாக்குதல் பரவலாக காணப...
குழித்தட்டு முறையில் மஞ்சள் நாற்று உற்பத்தி... மஞ்சள் சாகுபடி செய்து வரும் வடிவேல் குழித்தட்டு மு...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *