மஞ்சள் பயிரில் நூற்புழு தாக்குதலை கட்டுப்படுத்த வழிகள்

  • மஞ்சள் நடவு செய்த, 30, 60, 90, 120 மற்றும் 150 நாட்களில் ஒவ்வொரு முறையும் தழைச்சத்து, 25 கிலோ தரக்கூடிய, 55 கிலோ யூரியாவை, ஒரு ஏக்கருக்கு மேலுரமாக இட்டு மண்ணை அணைக்க வேண்டும்.
  • ஒரு ஏக்கருக்கு அசோஸ்பைரில்லம், 5 கிலோ மற்றும் பாஸ்போ பாக்டீரியா, 5 கிலோ நடவு செய்த ஒரு மாத்துக்கு பின் இடவேண்டும்.
  • நுண்ணூட்டங்களால் ஏற்படும் பற்றாக்குறையை போக்க, சூப்பர் பாஸ்பேட் 6 கிலோவை பத்து லிட்டர் தண்ணீரில் கரைத்து ஒரு நாள் இரவு ஊற வைக்க வேண்டும்.
  • மறுநாள் காலை தெளிந்த நீரை எடுத்து அதனுடன், 100 லிட்டர் தண்ணீர் சேர்த்து யூரியா 150 கிராம், துத்தநாக சல்பேட் 150 கிராம், இரும்பு சல்பேட் 150 கிராம் மற்றும் போராக்ஸ் 150 கிராம் சேர்க்க வேண்டும்.
  • பின் இக்கரைசலை இலையின் மேல் தெளிக்க வேண்டும்.
  • நுண்ணூட்ட சத்து பற்றாக்குறை காலங்களில், நுண்ணூட்ட சத்து கரைசலை, 25 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.
  • மஞ்சளில் ஊடுபயிராக மிளகாய், கத்தரி, வாழை கனகாம்பரம் பயிரிடுவதை தவிர்க்க வேண்டும்.
  • செண்டு மல்லியை ஓரங்களில் பயிரிட்டால் நூற்புழுவைக் கட்டுப்படுத்தலாம்.
  • நூற்புழுத் தாக்குதலை குறைக்க, மேலுரமாக யூரியா இடும்போது 5-10 கிலோ வேப்பம் புண்ணாக்கு இடவேண்டும்.
  • நடவு செய்த ஐந்தாவது மாதத்தில் ஏக்கருக்கு, 14 கிலோ கார்போப்யூரான் குருணை மருந்தை செடியைச் சுற்றி 2-3 செ.மீ., ஆழத்தில் இட வேண்டும்.
  • பின் மணல் கொண்டு மூடி நீர் பாய்ச்ச வேண்டும்.

இவ்வாறு மோகனூர் தோட்டக்கலை உதவி இயக்குனர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *