மணிலா அதிக மகசூலுக்கு “டானிக்”

அதிக மகசூல் பெற இலை வழி ஊட்டச்சத்து கரைசல் மணிலா சாகுபடியில் தெளித்து விவசாயிகள் பயன் பெறலாம். மேல்மலையனூர் வேளாண் உதவி இயக்குனர் பெரியசாமி விடுத்துள்ள செய்தி குறிப்பு:

  • மணிலா சாகுபடியில் அதிக மகசூல் பெற இலை வழி ஊட்டசத்து கரைசலை தெளிக்கலாம்.
  • செடிகளில் உள்ள காய்களின் எண்ணிக்கை, பருப்புகளில் திரட்சியுமே மகசூலை நிர்ணயிக்கின்றன.
  • இவை அதிகரித்து கூடுதல் மகசூல் பெற கரைசல் தெளிப்பிற்கு முதல் நாள் இரவு ஒரு கிலோ டிஏபி., உரத்தை 15 லிட்டர் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். 200 கிராம் போரக்ஸ் பவுடர் , 400 கிராம் அமோனியம் சல்பேட் உரத்தை ஒரு லிட்டர் சுடு நீரில் ஊற வைக்க வேண்டும்.
  • மறுநாள் காலை இரண்டு கரைசலில் உள்ள தெளிவு நீரை மட்டும் எடுத்து வடிகட்டி 185 லிட்டர் தண்ணீரில் கலக்க வேண்டும்.
  • இந்த கரைசலை தெளிக்கும் முன் 175 மில்லி பிலோனோபிக்ஸ் பயிர் வளர்ச்சி ஊக்கியை தெளிவுடன் கலக்க வேண்டும்.
  • இந்த ஊட்டச் சத்து கரைசலை ஒரு ஏக்கருக்கு கைத்தெளிப்பான் மூலம் காலை அல்லது மாலையில் தெளிக்க வேண்டும்.
  • தெளிப்பு செய்யும் போது வயலில் போதிய ஈரம் இருக்க வேண்டும்.
  • ஒரு டேங்கிற்கு 2 மி.லி.,டீப்பால் எனும் திரவத்தை கலக்க வேண்டும்.
  • மணிலா விதைத்து 25வது நாள் முதல் முறையும், 35 வது நாளில் இரண்டாவதாகவும், 45 ம் நாளில் மூன்றாவதாகவும் டானிக் தெளிக்க வேண்டும்.
  • மேல்மலையனூர், அவலூர்பேட்டை வேளாண் விரிவாக்க மையத்தில் ஊட்டச்சத்து கரைசல் தயாரிக்க தேவையான இடு பொருட்கள் கிட்டு, ஐசோபாம் எண்ணெய் வித்து திட்டத்தில் 50 சதவீத மானியத்தில் விநியோகிக்கப்படுகிறது, விவசாயிகள் வாங்கி பயனடையலாம்.

நன்றி: தினமலர்

Related Posts

மணிலா சாகுபடியில் ஊடு பயிராக கேழ்வரகு... தமிழக விவசாயிகள் அதிக பரப்பளவில் மணிலா பயிரை சாகுப...
மானாவாரி மணிலா சாகுபடி ரகங்கள்மானாவாரியில் சாகுபடி செய்ய ஏற்ற மணிலா ரகங...
மானாவாரி மணிலா சாகுபடி டிப்ஸ்... மானாவாரி மணிலா பயிரிட்டுள்ளவர்கள் மேலுரமாக ஜிப்சம்...
மணிலா மகசூல் அதிகரிக்க நுண்ணூட்டச் சத்து அவசியம்... மணிலாவில் மகசூல் அதிகரிக்க நுண்ணூட்டச் சத்து அ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *