மரபணு மாற்று பயிர்களுக்கு தமிழகத்தில் அனுமதியில்லை!’

”தமிழகத்தில், மரபணு மாற்று பயிர்களுக்கு அனுமதி வழங்கப்படாது. இந்த விஷயத்தில், விவசாயிகளும், சமூக ஆர்வலர்களும் கவலையடைய வேண்டாம்,” என, வேளாண் அமைச்சர், கிருஷ்ணமூர்த்தி கூறினார்.சட்டசபையில் நேற்று, வேளாண்துறை மானிய கோரிக்கை மீது நடந்த விவாதம்:

தே.மு.தி.க., சேகர்:

  • அரிசி, கொண்டைக்கடலை, கடுகு உள்ளிட்ட, 15 வகை பயிர்களுக்கு மரபணு மாற்று வயல்வெளி ஆய்வுக்கு, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
  • அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளே, இந்த ஆய்வுக்கு அனுமதி வழங்கி, வணிக பொருளாதார இழப்பை சந்தித்துள்ளன.இதற்கு, அனுமதி வழங்காமல் இருப்பதே புத்திசாலித்தனம். இவ்விஷயத்தில், நமது மாநிலத்தின் நிலைப்பாடு என்ன என்பதை அறிய விவசாயிகள் மிகுந்த ஆர்வமாக உள்ளனர்.

அமைச்சர் கிருஷ்ணமூர்த்தி:

  • மரபணு மாற்று பயிர் வயல்வெளி ஆய்வுக்கு அனுமதிக்ககூடாது என்றுகூறி, கடந்த 2005ல், சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
  • கோர்ட்டால் அமைக்கப்பட்ட வல்லுனர் குழு, இடைக்கால மற்றும் இறுதி அறிக்கைகளை தாக்கல் செய்தது.
  • மத்திய அரசின், மரபணுமாற்று தொழில்நுட்ப அனுமதிக்குழு, கடந்த 2012 – -13ல், வயல்வெளி ஆய்வுக்கு அனுமதி வழங்கியது. இக்குழுவின் கூட்டம், கடந்த மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் நடந்தது.
  • ஏற்கனவே, வழங்கப்பட்டு காலாவதியான வயல்வெளி ஆய்வை மீண்டும் மேற்கொள்ள இக்குழு பரிந்துரைத்தது.
  • வரும்காலத்தில், மேற்கொள்ளவுள்ள ஆய்வுக்கும் அனுமதி வழங்கியுள்ளது.
  • கடந்த, 2011 ஆக., மாதம், சட்டசபையில், 110வது விதியின் கீழ் பேசிய முதல்வர் ஜெயலலிதா, ‘மரபணு மாற்று பருத்தி சாகுபடிக்கு அனுமதியில்லை’ என, அறிவித்தார்.
  • மரபணு மாற்று வயல்வெளி ஆய்வுமேற்கொள்ள அந்தந்த மாநிலத்தில், தடையில்லா சான்றிதழ் பெறவேண்டும்.
  • தமிழகத்தில், மரபணு மாற்று பயிர்களுக்கு அனுமதி வழங்கப்படாது. இவ்விஷயத்தில், விவசாயிகளும், சமூக ஆர்வலர்களும் கவலையடைய வேண்டாம். இவ்வாறு, விவாதம் நடந்தது

 

நன்றி: தினமலர்

பசுமை தமிழகம் மொபைல் ஆப் இங்கே டவுன்லோட் செய்யவும்

Related Posts

விரைவில் மரபணு மாற்ற கடுகு? மரபணு மாற்ற பயிர்களுக்கான அனுமதி அளிக்கும் குழு (G...
மரபணு மாற்றப்பட்ட உணவு வகைகளுக்கு ரஷியா தடை... ஐரோப்பிய நாடுகளில் மரபணு மாற்றப்பட்ட உணவு வகைகளுக்...
மரபணு மாற்ற பட்ட வறட்சி எதிர்ப்பு மக்கா சோளம்... மரபணு மாற்ற படும் விதைகளுக்கு விஞானிகள் கூறும் ஒரு...
களைகொல்லி மருந்தும் மரபணு மாற்றபட்ட விதைகளும்... வயல் வெளிகளில் களை செடிகள் வருவது இயற்கை. அவற்றை ப...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *