மரவள்ளி தேமல் நோய் தடுக்கும் வழிகள்

மரவள்ளி இறவை சாகுபடியில் ஹெக்டேருக்கு 10 முதல் 11 டன் வரை மகசூல் கிடைக்கும்.மரவள்ளியில் சொட்டு நீர்பாசன முறையில் அதிக மகசூல் கிடைக்கும்.தற்போது 2 அல்லது மூன்றாம் பருவத்தில் பயிரில் தேமல் நோய் தாக்குதல் அதிகளவில் காணப்படுகிறது.

தேமல் நோய் அறிகுறிகளும் தடுக்கும் முறைகளும்

  • நோய் பாதிக்கப்பட்ட செடிகளில் இருந்து மற்ற செடிகளுக்கு வெள்ளை ஈக்கள் நோயை பரப்புகின்றன.
  • ஈக்கள் இலையில் உள்ள சாற்றை உறிஞ்சுவதால் மஞ்சள் நிறம் அடைந்து வெள்ளை நிறமாக மாறிவிடுகிறது.  மகசூல் பாதிக்கும் நிலை உருவாகும்.
  • தேமல் நோயை கட்டுப்படுத்த நோய் தாக்காத செடிகளில் இருந்து நடவுக் குச்சிகளை தேர்வு செய்ய வேண்டும்.
  • செடிகளுக்கு இடையே உள்ள களைகளை அப்புறப்படுத்த வேண்டும்.
  • தழைச்சத்து அதிகளவில் இடாமல் அளவாக பயன்படுத்த வேண்டும்.
  • நோய் பாதித்த செடிகளை கண்டுபிடித்து அழிக்க வேண்டும்.
  • “மீதைல் டெமெட்டான்’ இரண்டு மி.லி., ஒரு லிட்டர் தண்ணீர் அல்லது வேம்பு எண்ணெய் ஐந்து மி.லி., லிட்டர் தண்ணீருடன் கலந்து நோய் பாதிக்கப்பட்ட செடிகளில் தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.
  • இதன் மூலம் வெள்ளை ஈ பரவாமல் நோயை கட்டுப்படுத்தலாம்.

இவ்வாறு உதவி இயக்குனர் சிந்தாமணி வெளியிட்ட அறிக்கை  கூறப் பட்டுள்ளது.

நன்றி: தினமலர்

பசுமை தமிழகம் மொபைல் ஆப் இங்கே டவுன்லோட் செய்யவும்

Related Posts

மரவள்ளிக்கிழங்கு சாகுபடி தொழில்நுட்ப வழிமுறை...  மரவள்ளி சாகுபடி நிலத்தை மூன்று அல்லது நான்கு மு...
கரும்புக்கு மாற்றுப்பயிராக மரவள்ளி... கரும்புக்கு மாற்றுப்பயிராக மரவள்ளி சாகுபடி செய்ய ச...
மாவு பூச்சி தாக்குதல் குறைவால் விவசாயிகள் ஆர்வம்...  மாவு பூச்சி தாக்குதல் குறைவால், கோபி சுற்று வட்டா...
மரவள்ளியில் மாவுப் பூச்சியை கட்டுப்படுத்த ஒட்டுண்ணி... ராசிபுரம் பகுதியில் மரவள்ளியைத் தாக்கும் பப்...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *