கோவைக்காய் சிறப்புகள்

  • கோவை காய்கள் பச்சையாகவும் பழம் சிவப்பாகவும் இருக்கும். சிவப்பு நிறத்தின் சிறப்பினைச் சொல்ல கோவைப்பழம் உதவுகிறது. பெண் செடியின் கிளைத்துண்டுகள் விதைகளாகப் பயனாகின்றன. வேர்க்கிழங்குகளையும் விதைக்கப் பயன்படுத்தலாம்.
Courtesy: Dinamalar
Courtesy: Dinamalar
  • கோவைக்காய் தமிழகத்தில் குறிப்பாக செங்கல்பட்டு மாவட்டத்தில் வணிக முறையில் உற்பத்தியாகின்றது.
  • ஜூன்- ஜூலையில் 15 செ.மீ நீள பெண் கொடித்தண்டுகளை நடுவதற்கு பயன்படுத்தப்படுகின்றன.
  • 10% ஆண் கொடித்தண்டுகளையும் நடுதல் மகரந்தச் சேர்க்கைக்கு உதவும்.
  • சாகுபடியாகும் இது 6 மாதங்களில் அறுவடைக்கு வரும்.
  • ஆனால் ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலும் நிறைந்த மகசூலைப் பெறலாம்.
  • காய்களில் கசப்பு, இனிப்பு இரகங்கள் உள்ளன.
  • கோவைக்காயின் மணம், ருசி ஆகியவற்றிற்காக சிலர் இதனை விரும்புவதுண்டு.
  • கோவைக்காயைக் குறுக்காக அரிந்து கறியாக சமைத்துண்ணலாம்.
  • ஒரு ஆண்டுக்கு ஒரு கொடியிலிருந்து 500 – 600 காய்கள் வரை கிடைக்கும்.
  • ஒரு எக்டரிலிருந்து 40,000 கிலோ காய்கள் கிடைக்கும்.
  • கோவைக்காய் முற்றி பழுத்தபின் அப்பழங்களை உண்ணலாம். பழம் இனிப்பாக இருக்கும்.
  • கோவைக்கொடியில் உண்டாகியிருக்கும் பழங்கள் பறவைகளுக்கும் குறிப்பாக கிளிகளுக்கும் ஆடு, மாடு மேய்ப்பவர்களுக்கும் நல்ல உணவு ஆகவும் அமைந்துள்ளது. காயை வற்றலாகவும் ஊறுகாய் செய்தும் சாப்பிடலாம்.

மருத்துவப்பண்புகள்:

  • காய்களைச் சமைத்துண்ண குளிர்ச்சியைத் தரும். குட்டத்தை போக்கும்.
  • காசநோயைப் போக்கும். இளங்காயை வாயிலிட்டு மென்று சப்பிவர நாக்கு புண்கள் நீங்கும். கோவைக்காயை சிறுநீர்க்கோளாறு உடைய நோயாளிகள் அடிக்கடிப் பயன்படுத்தலாம். காயைச் சமைத்து உண்ண அருசி போகும்.
  • நாக்கிலுள்ள வெடிப்பு, வாய்ப்புண், நாக்குப்புண் நீங்கும். குமட்டல் விலகும். இதற்கு காயை மோரில் ஊற வைத்து வற்றலாகச் செய்து பொரித்தும் ஊறுகாய் செய்தும் சாப்பிடலாம்.
  • வேர் மற்றும் இலைச்சாறு, நீரிழிவு நோய்க்குப் பயன்படுவதாக எண்ணுகிறார்கள்.
  • கிழங்குகளைச் சுத்தம் செய்து குறுக்காக சிறுசிறு துண்டுகளாக்கி மிளகுத்தூளில் தொட்டு உண்ண மேற்கூறிய நோய்கள் போகும்.
  • கிழங்குச்சாற்றை 1-3 கரண்டி தர நீரிழிவு படை போகும்.வேரை உலர்த்திப் பொடி செய்து 30 கிராம் அளவில் தர மலத்தை இளக்கும்.
  • நல்லெண்ணையையும் இலைச்சாற்றையும் சமஅளவில் சேர்த்துக் சொறி, சிரங்கு, படை, கரப்பானுக்குத் தடவ புண்கள் குணமாகும். உடலில் பூசி தலைமுழுகி வர உட்சூடு தணியும்.
  • இலையைக் கொப்புளங்களின் மீது ஒட்டவைத்தால் கொப்புளங்கள் அழுந்தி நாளடைவில் மறையும்.
  • இலையை நறுக்கி தண்ணீர் சேர்த்துக் காய்ச்சி குடிநீராக்கி உள்ளுக்குத் தர மேகவெட்டை நீங்கும். உடல்சூடு தணியும். கண்எரிச்சல், இருமல், நீரடைப்பு, சொறி, சிரங்கு, புண் குணமாகும். விக்கலை நிறுத்தும், கோழையை அகற்றும், தோல் நோய்கள் போகும்.
  • கோவை இலையை சிறுசிறு துண்டுகளாக அரிந்து அத்துடன் இரண்டு பங்கு தண்ணீர் சேர்த்து, சட்டியிலிட்டு சரிபாதியாகக் காய்ச்சி தினம் இரண்டுவேளை இச்சாற்றைக் குடித்துவர கண் எரிச்சல், இருமல் நீங்கும்.
  • இலைகளை உலர்த்தித் தூளாக்கி தினம் இரண்டு சிட்டிகை வெற்றிலையில் கலந்து சாப்பிடலாம். பூக்கள் அரிப்பையும், பித்த மயக்கத்தையும் போக்கும். காமாலைக்கு நல்லது.
  • இது குறித்து மேலும் விபரம் பெற டாக்டர் பா.இளங்கோவன், அலைபேசி எண். 09842007125 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *