சீரகம் சாகுபடி

சீரகம் ஒரு மருத்துவ மூலிகையாகும். வட இந்தியாவில் மலைப்பகுதிகளில் அதிகம் பயிர் செய்யப்படுகிறது. தமிழகத்தில் மேட்டுப்பாங்கான இடங்களிலும் மலைப்பகுதிகளிலும் பயிர் செய்யப்படுகிறது. காய்ந்த விதைகளே சீரகம் எனப்படும்.
ரகங்கள்: கோ.1 மற்றும் கோ.2.
மண் மற்றும் தட்பவெப்ப நிலை: ஆழமான வடிகால் வசதியுள்ள அங்ககப் பொருட்கள் நிறைந்த மண்ணில் நன்கு செழித்து வளரும். குளிர்ந்த தட்பவெப்பநிலையில் நன்கு வளரும். கடல் மட்டத்திலிருந்து 3000 மீட்டர் வரை பயிர் செய்யலாம்.
பருவம்: மலைப்பகுதிகளுக்கு: மே – ஜூன்; சமவெளிப்பகுதிகளுக்கு: அக்டோபர்- நவம்பர் அதிக மழை பெய்யும் காலங்களில் பயிர் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
விதையும் விதைப்பும்: நேரடி விதைப்பதற்கு எக்டருக்கு 9-12 கிலோ நாற்று விட்டு நடவு செய்ய 3-4 கிலோ, ஒரு எக்டர் நடவு செய்ய நாற்றங்காலுக்கு 100 சதுர மீட்டர் அளவுள்ள பரப்பு தேவை. தேவைக்கேற்ப மேடைப்பாத்திகள் அமைத்து, விதைகளை பாத்திகளின் மேல் சீராகத்தூவி, கைக்கொத்தியால் மண்ணுடன் நன்கு கலக்கச்செய்ய வேண்டும். விதைகள் முளைக்க 5 முதல் 9 நாட்கள் ஆகும்.
நடவு: 5-6 வாரங்கள் ஆன நாற்றுக்களைப் பிடுங்கி 60 து 30 செ.மீ. இடைவெளியில் நடவேண்டும்,
நீர் நிர்வாகம்: விதைத்தவுடன் நீர் பாய்ச்ச வேண்டும். பின் 3 முதல் 4 நாட்கள் இடைவெளியில் நீர் பாய்ச்ச வேண்டும். பின் மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்து 7 முதல் 15 நாட்கள் இடைவெளியில் நீர்பாய்ச்ச வேண்டும்.
ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை:அடியுரமாக எக்டருக்கு தொழு உரம் 10 டன்கள், 25 கிலோ தழைச்சத்து, 10 கிலோ மணிச்சத்து கொடுக்கக்கூடிய ரசாயன உரங்களை இடவேண்டும்.
மேலுரம்: செடிகள் பூ விடும் தருணத்தில் எக்டருக்கு 25 கிலோ தழைச்சத்து கொடுக்கக்கூடிய ரசாயன உரங்களை இடவேண்டும்.
பயிர்- இடவேண்டிய சத்துக்கள் (கிலோ) – இப்கோ, டிஏபி, யூரியா இடவேண்டிய அளவு (கிலோ)
சீரகம் – அடியுரம் – தழை25 – மணி10 – சாம்பல்0 – டிஏபி22 – யூரியா46
சீரகம் – மேலுரம் – தழை25 – மணி0 – சாம்பல்0 – டிஏபி0 – யூரியா55
களைக்கட்டுப்பாடு மற்றும் பின்செய் நேர்த்தி: களைகள் முளைக்கும் முன் எக்டருக்கு ஒரு லிட்டர் பெண்டிமித்திலின் களைக்கொல்லி தெளிக்க வேண்டும். பின் இரண்டு அல்லது மூன்று முறை கைக்களை எடுக்க வேண்டும். 3வது மாதத்தில் செடிகளுக்கு மண் அணைக்க வேண்டும்.
ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு: அசுவினிப்பூச்சி: இப்பூச்சியைக் கட்டுப்படுத்த டைமித்தோயேட் 30இசி 2மில்லி அல்லது மீதைல் டெமட்டான் 25 இசி 2 மில்லி மருந்துடன் ஒரு லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்க வேண்டும்.
சாம்பல் நோய்: நோயின் அறிகுறிகள் தென்பட்டவுடன் எக்டருக்கு 25 கிலோ தூவும் கந்தகம் மருந்தை உபயோகிக்க வேண்டும்.
அறுவடை: பயிர் 7-8 மாதத்திற்குள் அறுவடைக்கு தயாராகிவிடும். 10-15 நாட்கள் இடைவெளியில் காய்ந்த பூங்கொத்துகளை அறுவடை செய்ய வேண்டும். பின் இவற்றை வெயிலில் 4-5 நாட்கள் உலர்த்தி, பின் குச்சியில் தட்டி விதைகளைத் தனியாகப் பிரித்து எடுக்க வேண்டும்.
மகசூல்: எக்டரிலிருந்து 500-750 கிலோ விதைகள் ஒரு வருடத்திற்கு.
அகமது கபீர், தாராபுரம், 08903757427.

நன்றி: தினமலர் 

பசுமை தமிழகம் மொபைல் ஆப் இங்கே டவுன்லோட் செய்யவும்

Related Posts

கொடுக்காப்புளி … 5 ஏக்கரில் ஆண்டு வருமானம் 9 லட்சம்!... ‘அடிக்கடி தோட்டத்துக்குப் போய் விவசாயத்தை கவனிக்க ...
2 டன் புல்லில் 1 மெகாவாட் மின்சாரம்!... கால்நடை தீவனத்திற்கு பயிரிடப்படும் சி.என்.4 கம்பு ...
இயற்கை அங்காடி நடத்தும் நெல்லை இளைஞர்... பாரம்பரிய உணவுப் பழக்கத்தை வீடு தேடி மக்களிடம் கொ...
கனகாம்பரம் சாகுபடி தொழில் நுட்பம் வீடியோ... கனகாம்பரம் சாகுபடி தொழில் நுட்பம் வீடியோ ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *