பூவரச மர சிறப்புகள்

பூவரசம்பூ பூத்தாச்சு என்ற பாட்டை அறிவோம். இந்த மரத்தின் சிறப்புகளை பார்ப்போமா?

Courtesy: Wikipedia
Courtesy: Wikipedia

தேக்கு மரத்திற்கு இணையாக கதவு, ஜன்னலுக்கு பூவரச மரத்தின் தடிகள் பயன்படுத்தப்படுவதால் அவற்றின் கன்றுகளை இலவசமாக வழங்கி ஊக்குவிப்பதற்கான முயற்சியை வனத்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.திண்டுக்கல் சிறுமலை வனச் சரக அலுவலர் சரவணன் கூறியதாவது:

  • ஆக்சிஜனை அதிகம் வெளியிடும் சக்தி பூவரச மரத்தில் உள்ளது.
  • ஏழைகளின் தேக்கு என அழைக்கப்படுகிறது.
  • எல்லா காலங்களிலும் பசுமையாகவே காணப்படும்.
  • வீடுகளின் ஓரங்களில் இவற்றை வளர்க்கலாம்.
  • தெற்கு ஆற்காடு பகுதியில் மர சாமான்கள் செய்வதற்கு அதிகமாக இவ்வகை மரங்களின் தடிகளைத்தான் பயன்படுத்துகின்றனர்.
  • குறைந்தளவு தண்ணீரை பயன்படுத்தி வளரும் தன்மை பெற்றது.
  • மரத்திலிருந்து உதிரும் இலைகள் மண்ணை வளப்படுத்தும்.
  • ஒவ்வொரு வீட்டிலும் ஒரு பூவரச மரம் இருக்க வேண்டும் என்பதற்காக இதன் கன்றுகளை இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளோம்,’ என்றார்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *