வறட்சியில் கை கொடுக்கும் கோழிக்கொண்டை பூ சாகுபடி

தண்ணீர் பற்றாக்குறையால் வறட்சியை தாக்குபிடித்து பலன் தரும் கோழிக்கொண்டை பூ சாகுபடி மூலம் விவசாயிகள் வருவாய் ஈட்டி வருகின்றனர்.

  • பருவமழை கடந்த இரு ஆண்டுகளாக ஏமாற்றியதால் தியாகதுருகம் பகுதியில் வறட்சியான சூழல் நிலவுகிறது.
  • நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயம் பாதித்து, நெல், கரும்பு சாகுபடி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
  • மழை குறைந்ததால் அளவான தண்ணீரை கொண்டு மகசூல் கொடுக்கும் பயிர்களை சாகுபடி செய்வதில் விவசாயிகளின் கவனம் திரும்பியுள்ளது.
  • இந்த வகையில் கோழி கொண்டை பூ சாகுபடி செய்து லாபம் ஈட்டி வருகின்றனர்.
  • மாலை கட்ட பயன்படும் கோழிக்கொண்டை பூ அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.
  • இதன் தேவையை கருத்தில் கொண்டு இதை சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகின்றனர்.
  • வறட்சியை தாக்குப்பிடித்து வளரும் இச்செடிகளுக்கு அளவான தண்ணீர் போதுமானதாக உள்ளது.
  • குன்னியூர் பகுதியில் விவசாயிகள் சிலர் இப்பூச்செடிகளை சாகுபடி செய்துள்ளனர்.
  • அரை ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்த கோழிக்கொண்டை பூச்செடிகளில் இருந்து தினமும் 20 கிலோ பூ கிடைக்கிறது.
  • ஒருகிலோ 35 ரூபாய் வரை வெளிமார்கெட்டில் விற்பனை செய்கின்றனர்.
  • இச்செடிகளில் இருந்து பூக்களை பலநாட்கள் பறிக்காமல் இருந்தால் கூட வாடுதில்லை. இதனால் தேவைப்படும் போது பறித்து பலன் ஈட்ட முடிகிறது.
  • பூக்கடைகளில் இருந்து ஆர்டர் பெற்று அதற்கு ஏற்ற அளவு பூக்களை செய்து விற்கின்றனர்.
  • செலவு போக தினசரி 500 ரூபாய் வரை லாபம் கிடைக்கிறது. மழை ஏமாற்றிய நிலையில் கோழிக்கொண்டை பூ சாகுபடி மூலம் விவசாயிகள் பலன் அடைந்து வருகின்றனர்.

நன்றி: தினமலர் 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *