வறட்சியில் கை கொடுக்கும் கோழிக்கொண்டை பூ சாகுபடி

தண்ணீர் பற்றாக்குறையால் வறட்சியை தாக்குபிடித்து பலன் தரும் கோழிக்கொண்டை பூ சாகுபடி மூலம் விவசாயிகள் வருவாய் ஈட்டி வருகின்றனர்.

 • பருவமழை கடந்த இரு ஆண்டுகளாக ஏமாற்றியதால் தியாகதுருகம் பகுதியில் வறட்சியான சூழல் நிலவுகிறது.
 • நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயம் பாதித்து, நெல், கரும்பு சாகுபடி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
 • மழை குறைந்ததால் அளவான தண்ணீரை கொண்டு மகசூல் கொடுக்கும் பயிர்களை சாகுபடி செய்வதில் விவசாயிகளின் கவனம் திரும்பியுள்ளது.
 • இந்த வகையில் கோழி கொண்டை பூ சாகுபடி செய்து லாபம் ஈட்டி வருகின்றனர்.
 • மாலை கட்ட பயன்படும் கோழிக்கொண்டை பூ அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.
 • இதன் தேவையை கருத்தில் கொண்டு இதை சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகின்றனர்.
 • வறட்சியை தாக்குப்பிடித்து வளரும் இச்செடிகளுக்கு அளவான தண்ணீர் போதுமானதாக உள்ளது.
 • குன்னியூர் பகுதியில் விவசாயிகள் சிலர் இப்பூச்செடிகளை சாகுபடி செய்துள்ளனர்.
 • அரை ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்த கோழிக்கொண்டை பூச்செடிகளில் இருந்து தினமும் 20 கிலோ பூ கிடைக்கிறது.
 • ஒருகிலோ 35 ரூபாய் வரை வெளிமார்கெட்டில் விற்பனை செய்கின்றனர்.
 • இச்செடிகளில் இருந்து பூக்களை பலநாட்கள் பறிக்காமல் இருந்தால் கூட வாடுதில்லை. இதனால் தேவைப்படும் போது பறித்து பலன் ஈட்ட முடிகிறது.
 • பூக்கடைகளில் இருந்து ஆர்டர் பெற்று அதற்கு ஏற்ற அளவு பூக்களை செய்து விற்கின்றனர்.
 • செலவு போக தினசரி 500 ரூபாய் வரை லாபம் கிடைக்கிறது. மழை ஏமாற்றிய நிலையில் கோழிக்கொண்டை பூ சாகுபடி மூலம் விவசாயிகள் பலன் அடைந்து வருகின்றனர்.

நன்றி: தினமலர் 

பசுமை தமிழகம் மொபைல் ஆப் இங்கே டவுன்லோட் செய்யவும்

Related Posts

சீரகம் சாகுபடி சீரகம் ஒரு மருத்துவ மூலிகையாகும். வட இந்தியாவில் ம...
மருத்துவ குணமுள்ள ஸ்பைருலினா பாசி... மருத்துவ குணம் மிகுந்த "ஸ்பைருலினா' வளர்ப்பு...
கருணை கிழங்கு சாகுபடி! மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் ஒரு போக நெல் ச...
மண் பரிசோதனை மூலம் உரச்செலவு குறையும்... "மண் பரிசோதனை செய்வதன் மூலம் மண்ணில் ஏற்கனவே உள்ள...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *