2 டன் புல்லில் 1 மெகாவாட் மின்சாரம்!

கால்நடை தீவனத்திற்கு பயிரிடப்படும் சி.என்.4 கம்பு நேப்பியர் பயிரை, மின் உற்பத்திக்காக சாகுபடி செய்து வரும் விவசாயி ராஜசேகரன் கூறுகிறார்:

  • திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி பகுதியைச் சேர்ந்தவன் நான். என் நிலத்தில் நீண்ட காலமாகவே விவசாயம் செய்யவில்லை. சில நாட்களுக்கு முன், மண் பரிசோதனை செய்த போது, நிலத்தின் கார அமிலத்தன்மை, பி.எச்., 8 – 8.5 என, இருந்தது. வேளாண் அதிகாரிகள் கூறிய ஆலோசனை படி, பல்வேறு முறைகளில் விவசாயம் செய்தும் பலனில்லை; விவசாயத்தை விட்டு விடலாம் என, எண்ணினேன்.
  • அச்சமயம், செம்பட்டியில் உள்ள விவசாய கழிவுகள் மூலம், மின் உற்பத்தி செய்யும் ஓரியன்ட் கிரீன் பவர் கம்பெனியினர், (Oriental Green Power Company) ‘மாட்டுத் தீவனமான, சி.என்.4 கம்பு நேப்பியர் என்ற புல் வகையை பயிரிட்டால், நன்கு வளரும்; இதை, மின்சாரம் தயாரிப்பதற்கான எரிபொருளாக பயன்படுத்திக் கொள்ளலாம்,’ எனக் கூறினர்.
  • சி.என்.4 கம்பு நேப்பியர் புல் சாகுபடிக்கான விதைக்கரணை, நடவு செலவு, உரம், அறுவடை செலவு எல்லாமே, நிறுவனமே ஏற்றது.
  • வறட்சிக் காலத்தில் எந்த விவசாயமும் செய்ய முடியாத சூழ்நிலையில், வறட்சியையும் தாங்கி, ஓரளவு வளர்ச்சியடைந்து வருமானம் கிடைத்தது.
  • இதற்கு, நிலத்தை நன்றாக உழவு செய்து, கடைசி உழவிற்கு முன் தொழு உரம், சாம்பல் இட்டு உழவு போட்டு, வாய்க்கால் இழுத்து விட வேண்டும்.
  • முக்கால் முதல், 2 அடி வரை நடவு இடைவெளி போதுமானது; அனைத்து சீசனிலும் நடவு செய்யலாம்.
  • அடியுரமாக யூரியா, சூப்பர் பாஸ்பேட், ஒரு ஏக்கருக்கு ஐந்து மூட்டை போடலாம். மேலுரமாக, தண்ணீரில் கரைத்து விடும் உரத்தை நிறுவனமே கொண்டு வந்து கரைத்து விடுகின்றனர்.
  • புல் வெளிர் நிறத்தில் இருந்தால், ‘சிங்க் சல்பேட்’ அடிக்கலாம்.நட்டவுடன் புல் கரணைக்கு, உயிர் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அறுவடை நாட்களுக்குள், நான்கு அல்லது ஐந்து முறை தண்ணீர் பாய்ச்சினால் போதும்.
  • ஆறு மாதங்களுக்கு ஒருமுறை தொடர்ந்து, ஐந்து ஆண்டுகளுக்கு அறுவடை கிடைக்கும். ஒரு அறுவடையில், 15 – 70 டன் வரையில் மகசூல் கிடைக்கும். ஈரப்பதம், 70 சதவீதம் இருந்தால், 110 டன், ஒரு ஏக்கருக்கு மகசூல் வரும். அறுவடையின் போது புல், 45 சதவீதம் ஈரப்பதத்துடன் இருக்க வேண்டும். ஒரு டன், 55 ரூபாய் வரையில் விலை போகும்.
  • சி.என்.4 கம்பு நேப்பியர் புல்லை பாய்லரில் எரித்து, நீராவியாக முதலில் பெறுகின்றனர். இதை, ‘டர்பைன்’ கலத்தில் செலுத்தி, மின்சக்தியாக உருவாக்குகின்றனர். இரண்டு டன் புல்லில் இருந்து, ஒரு மெகாவாட் – ஆயிரம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.தொடர்புக்கு: 09443505209

நன்றி: தினமலர்

பசுமை தமிழகம் மொபைல் ஆப் இங்கே டவுன்லோட் செய்யவும்

Related Posts

Android போனில் மொபைல் app அன்ட்ராய்ட் போனில் பசுமை தமிழகம் படிக்க app டவுன்ல...
பாக்கு மரங்களுக்கு மத்தியில்ஊடுபயிராக வாழை... கூடலுார், பந்தலுார் பகுதிகளில் பாக்கு மரங்களுக்கு ...
காசு அள்ளித் தரும் கடம்ப மர சாகுபடி... மருத்துவ குணம், பென்சில், தீக்குச்சி, காகிதம் தய...
புவி இணையத்தளம் மற்றும் மொபைல் அப்... வணக்கம்!தமிழகத்தை நோக்கியுள்ள சுற்று சூழ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *