யானைகள்: தெரிந்ததும் தெரியாததும்

ரயில்களிலும்,பஸ்களிலும் அடிப்பட்டு இறந்து கொண்டிருக்கும் பற்றிய செய்திகள் மனதை
பாதிக்கின்றன.

யானைகளை மிகவும் புத்திசாலியானவை. ஞாபக சக்தி அதிகம். மனிதர்களை போல கூட்டமாக  வாழ்பவை.  பெண் யானை குட்டி இடும் போது மற்ற பெண் யானைகள் அம்மாவை சுற்றி நின்றுகொண்டு இருக்குமாம். இறந்து போன யானையை மற்ற யானைகள் வந்து மரியாதை செய்யும். சிறுவர்களை போன்று விஷமத்தனமும் அறிவு கூர்மையும் உள்ள யானைகளை பற்றி சற்று அறிவோமா?

  • ஆசிய யானைகளில் மூன்று துணை வகைகள் உள்ளன:
    • E. m. indicus இந்தியாவில் வாழும் உள்ளினம்
    • E. m. maximus இலங்கையில் வாழும் உள்ளினம்
    • E. m. sumatranus சுமத்ராவில் வாழும் உள்ளினம்
  • உலகில் 13 நாடுகளில் ஆசிய யானை வாழ்கிறது. இந்தியாவில் 16 மாநிலங்களில் வாழ்கிறது.
  • உலகில் உள்ள ஆசிய யானைகளின் எண்ணிக்கை:35,000 -40,000

    Courtesy: Hindu
    Courtesy: Hindu
  • இதில் பெருமளவு இந்தியாவில்தான் உள்ளது: 25,000- 30,000
  • இந்தியாவில் பெரும்பான்மையான யானைகள் தென்னிந்தியாவில் உள்ளன: 15,000 -20,000
  • இந்த யானைகளில் பெரும்பகுதி (சுமார் 9,000) குறிப்பிட்ட ஒரு பகுதிக்குள் வாழ்கிறது. பிரம்மகிரி, நீலகிரி, கிழக்கு மலைத்தொடர் ஆகிய மூன்றும் சந்திக்கும் இடமே அந்தப் பகுதி. உலகிலேயே ஆசிய யானைகள் அதிகமாக வாழும் பகுதி இது என்பது குறிப்பிடத்தக்கது.
  • இந்தச் சுற்றுவட்டாரத்தில் பாதுகாக்கப்பட்ட சரணாலய வளையத்துக்குள் பெரும் பகுதி இருப்பதே, யானைகள் அதிகம் இருப்பதற்கு அடிப்படைக் காரணம்.
  • இருந்தபோதும் இங்கும் காடுகள் துண்டாடப்படுவது, காடுகளின் தரம் வீழ்ச்சியடைவதுதான் யானைகள் காட்டை விட்டு வெளியே வருவதற்கு அடிப்படைக் காரணம். யானைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கான ஆதாரங்களைவிட, காட்டின் பரப்பு அப்பட்டமாகக் குறைந்துவருவதே யானைகள் வெளியேறுவதற்கு முதன்மைக் காரணம்.
  • அது மட்டுமல்லாமல் யானைகள் குறிப்பிட்ட காட்டு எல்லைக்குள்ளோ, மாநில எல்லைக்குள்ளோ வாழ்வதில்லை. தொடர்ந்து பயணித்துக்கொண்டே இருக்கக்கூடியவை.
  • தமிழகத்தில் சுமார் 4,000 யானை களின்வரை இருக்கலாம். இவை தமிழக எல்லைக்குள் மட்டுமே இருக்கும் என்று சொல்ல முடியாது.
  • யானை மனித எதிர்கொள்ளல் காரணமாக ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவில் ஏற்படும் உயிர்ப் பலி:மனிதர்கள்: 450, யானைகள்: 150
  • ஒவ்வோர் ஆண்டும் தமிழகத்தில் இறந்துபோகும் காட்டு யானைகளின் எண்ணிக்கை (சராசரி): 75

நன்றி: ஹிந்து


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *