திசு வாழையில் பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி?

அண்மையில் பெய்த பலத்த மழை காரணமாக திசு வாழையில் பூச்சி நோய் காணப்படுவதாக வேளாண் விஞ்ஞானிகள் குழு ஆய்வில் கண்டுபிடித்துள்ளது. அதற்கான தடுப்பு முறைகளையும் தெரிவித்துள்ளது.

நோய் தாக்குதல் அறிகுறிகள்:

  • எர்வினியா நோய் தாக்கப்பட்ட வாழையின் இலை சிறுத்து நரம்புகள் கடினமாகவும், இலை வெளிரிய நிறமாக காணப்படும்.
  • நோய் தீவிரமடையும் போது இலைகள் காய்ந்திருக்கும்.
  • புதிதாக வரும் குருத்துக்கள் சிறுத்து வளராமல் இலை விரிவடையாமல் காணப்படும்.
  • கூண் வண்டு தாக்குதலை தொடர்ந்து எர்வினியா என்ற பாக்டீரியா அழுகல் நோய் தீவிரமடையும்.
  • பாதிக்கப்பட்ட கிழங்கை இரண்டாக வெட்டிப்பார்க்கும் போது அழுகிய துர்நாற்றத்துடன் அதிக வழவழப்பான திரவம் வெளிப்படும்.

வழிமுறைகள்

  • வயலில் நல்ல வடிகால் வசதியினை ஏற்படுத்தி மண்ணில் அதிக ஈரத்தன்மை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
  • மேலும் பாத்தி முறையில் பாசன முறையை தவிர்க்க வேண்டும்.
  • முற்றிலும் பாதிக்கப்பட்ட கிழங்கை அப்புறப்படுத்தி கிருமிநாசினியான 2 சதவீதம் பிளீச்சிங் பவுடர் (ஒரு லிட்டர் நீருக்கு 20 கிராம் கரைத்து மண்ணில் தெளிக்க வேண்டும்).
  • கூண் வண்டினை கட்டுப்படுத்த 10 முதல் 20 கிராம் கார்பரில் அல்லது 4 கிராம் கார்போபிரான் மருந்தை தண்டுப்பகுதியை சுற்றி தூவி மண்ணை கிளறி விட வேண்டும்.
  • இம்முறையை கையாண்டப் பத்து நாள் கழித்து வாழை சக்தி நுண்ணூட்ட கலவையை ஒரு மரத்திற்கு 10 கிராம் அளவில் தண்டுப் பகுதியை சுற்றி தூவி விட்டு சொட்டு நீர் பாசனம் செய்யவும்.

வாழை விவசாயிகள் இந்த வழிமுறைகளை கடைபிடித்து பயனடையுமாறு வேளாண் விஞ்ஞானிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

நன்றி: தினமணி

Related Posts

வாழையில் வாடல் நோய் வாழையில் ஏற்படும் வாடல் நோயைக் கட்டுப்படுத்த தோட்ட...
வாழையில் அறுவடை பின்சார் தொழில்நுட்பங்கள்...  சீப்புகளை பிரித்தல்வாழையில் குலையின...
அதிக லாபம் தரும் திசு வாழை சாகுபடி... திசு வாழை பயிரிட்டால் நிகரலாபம் அதிகம் பெறலாம் என்...
வாழையில் பனாமா வாடல் நோய் அறிகுறிகள்தாக்கப்பட்ட மரங்களின் அடி இலைகள் தி...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *