மொந்தன் ரக கறிவாழை

மொந்தன் ரக கறி வாழை சாகுபடி பற்றி அனுபவங்களை திருவண்ணாமலை மாவட்டம் பண்ணைக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை தெரிவிப்பது:

  • அனைத்து பட்டங்களிலும் சாகுபடி செய்யலாம்.
  • நிலத்தில் வடிகால் வசதி அவசியம். நிலத்தை நன்கு உழுது மண்ணைப் பொலபொலப்பாக மாற்றி, செடிக்கு செடி, வரிசைக்கு வரிசை ஏழரை அடி இடைவெளியில் ஒன்றரை அடி ஆழம், அகலம் குழிகள் எடுத்து 1 வாரம் வரை ஆறப்போட்டு 5 கிலோ தொழு உரத்துடன் மேல் மண்ணைக்கலந்து குழியை நிரப்ப வேண்டும்.
  • பின்னர் பாசனம் செய்து, 2 மாத வயதுள்ள கன்றுகளை குழிகளில் நடவு செய்ய வேண்டும்.
  • நடவு செய்த 3ம் நாள் உயிர்த்தண்ணீரும் பின் வாரம் ஒரு தண்ணீரும் கொடுத்தால் போதுமானது.
  • 30ம் நாள் இடைஉழவு செய்து, களை நீக்கம் செய்து, 90ம் நாள் 1 டன் மண்புழு உரத்துடன் 50 கிலோ காம்ப்ளக்ஸ், 25 கிலோ பொட்டாஷ், 25 கிலோ வேப்பம் புண்ணாக்கு ஆகியவற்றை கலந்து மரத்துக்கு ஐந்தரை கிலோ வீதம் வைத்து மண் அணைத்து விட வேண்டும்.
  • நடவு செய்த 7 மாதத்தில் குலை தள்ள ஆரம்பிக்கும். 9-12 மாதங்களில் அறுவடை செய்யலாம். 25 சென்டுக்கு செலவு போக நிகர லாபம் ரூ.18,000 கிடைத்துள்ளது. தொடர்புக்கு: அண்ணாமலை, 08973093432)

டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.

நன்றி: தினமலர்

Related Posts

வாழையில் மதிப்பூட்டுதல் வாழைப்பழத்தில் இருந்து உலர் வாழைப்பழம், பொடி, இணை ...
வாழை சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி... வாழை சாகுபடியில் துல்லிய பண்ணையம், பூச்சி மற்றும் ...
அதிக லாபம் தரும் திசு வாழை சாகுபடி... திசு வாழை பயிரிட்டால் நிகரலாபம் அதிகம் பெறலாம் என்...
வாழை தொழிற்நுட்ப பயிற்சி வாழை தேசிய ஆராய்ச்சி மையம் (NRCB) வாழை, வாழை நார் ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *