அழுகும் வழைகன்றை என்ன செய்வது?

முதலில் அழுகிய வாழை கன்றின் குருத்தை வெட்டி எடுத்துவிட வேண்டும். பின்னர் முதல் கட்டமாக காப்பர் ஆக்சி குளோரைடு என்ற மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் 5 கிராம் என்ற அளவில் கலந்து குருத்தில் ஊற்ற வேண்டும்.

பின்னர் டிரைகோடெர்மா விரிடி 1 கிலோகிராம் 50 – 60 குப்பையுடன் கலந்து உரமாக அந்த மரத்திற்கு தரவேண்டும். இவ்வாறு உரம் கொடுக்கும் போது மண்ணில் உள்ள கிருமிகள் செத்துவிடும். மேலும் கீழ்கண்ட உர மேலாண்மை செய்ய வேண்டும்.

ஒரு ஏக்கருக்கு 3 மூட்டை என்ற அளவில் டை அமோனியம் பாஸ்பேட் (Di Ammonium Phosphate), 3 வது மாதம் 150 கிராம் யூரியா, 250 கிராம் பொட்டாஷ் போன்றவை தரவேண்டும். 5வது மாதம் குலை தள்ளிவிடும்.

நிகழ்ச்சி : 19.04.2012 அன்று தாமரைக்குளம் மற்றும்  சுந்தர முடையான் விவசாயிகளின் கேள்விகளும் அதற்கான பதில்ளும்

பதில் அளித்தவர் : செந்தில் குமார், ஆலோசகர், MSSRF

நன்றி: M.S. சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம

பசுமை தமிழகம் மொபைல் ஆப் இங்கே டவுன்லோட் செய்யவும்

Related Posts

வாழையில் வாடல் நோய் கட்டுப்படுத்த வழிமுறை... வெயில் காலத்தில் வாழையில் "பனாமா' வாடல் நோயை கட்டு...
வாழையில் வெற்றி சாதித்த விவசாயி!... திட்டமிட்டு வாழையை பயிரிட்டால் வெற்றி காணலாம் என்க...
வாழையில் ஊடுபயிராக தக்காளி ரிஷிவந்தியம் அடுத்த கடம்பூர் பகுதியை சேர்ந்தவர்...
வாழை சாகுபடி டிப்ஸ் கற்பூரவல்லி வாழைஏக்கருக்கு செலவு போக நிகர வருமான...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *