வாழையில் ஊடுபயிராக இஞ்சி

பூலத்தூர் மலைக் கிராமத்தில் பட்டதாரி விவசாயி ஒருவரின் புது முயற்சியால், ஊடு பயிராக இஞ்சி பயிரிடப்பட்டு, மலை வாழையில், நோய் தாக்குதல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

பூலத்தூர் பகுதியை சேர்ந்தவர் கோகுலகிருஷ்ணன், 38. எம்.ஏ., பட்டதாரி. தோட்டத்தில் காபி, வாழை, ஆரஞ்சு, அவக்கடா உள்ளிட்ட மலைப்பயிர்கள் பயிரிட்டுள்ளார்.

கோகுலகிருஷ்ணன், 10 ஏக்கரில், மலை வாழைக்கு இடையே இஞ்சி பயிரிட்டுள்ளார்.

இதனால் மலை வாழையில் முடிக்கொத்து, வாடல் நோய் தாக்குதல் முற்றிலுமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
கோகுலகிருஷ்ணன் கூறியதாவது: வாழைக்கு இடையே இஞ்சி பயிரிட்டேன். நல்ல மகசூலும் கிடைத்தது. வாழையில் நோய் தாக்குதல் கட்டுப்படுத்தி, தரமான வாழைக் காய்கள் கிடைத்தது. மலை இஞ்சிக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இது, புது முயற்சி மட்டுமல்லாது மலை வாழைக்கு புத்துயிர் அளித்துள்ளது, என்றார்.
தடியன்குடிசை தோட்டக்கலை ஆராய்ச்சி நிலைய தலைவர் ஆனந்தன் கூறுகையில், “”மருத்துவ குணமுள்ள மலை இஞ்சிக்கு இடப்படும் தொழு உரத்தால், வாழை வளர்ச்சி பெற்று எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பறிக்கப்பட்ட இஞ்சிச் சாறு வாழையில் உள்ள பூச்சிகளை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. முதல் ஆண்டு வாழையில், ஊடுபயிராக இஞ்சி பயிரிட்டால், நல்ல பலன் கிடைக்கும்,” என்றார்.

நன்றி: தினமலர்

Related Posts

வாழையில் வாடல் நோய் கட்டுப்படுத்த வழிமுறை... வெயில் காலத்தில் வாழையில் "பனாமா' வாடல் நோயை கட்டு...
வாழையில் கடலை ஊடு பயிர்: வறட்சியிலும் சாதனை... கடும் வறட்சியிலும் கள்ளந்திரியில் விவசாயி ஒருவர் வ...
வாழைத்தார் அறுவடை உத்திகள் விருதுநகர் மாவட்டத்தில் பரவலாக வாழை பயிரிடப்பட்டு ...
வாழைப் பயிரைத் தாக்கும் வெட்டுப்புழுவை கட்டுப்படுத்துவது எப்படி?... தற்போதுள்ள குளிர்கால பருவத்தில் வாழைப் பயிரை தாக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *