வாழையில் கடலை ஊடு பயிர்: வறட்சியிலும் சாதனை

கடும் வறட்சியிலும் கள்ளந்திரியில் விவசாயி ஒருவர் வாழை தோட்டத்தில் ஊடு பயிராக கடலை சாகுபடி செய்து அசத்தி வருகிறார்.

மதுரை மாவட்டத்தில் இந்த ஆண்டு பருவ மழைகள் பொய்த்து விட்டன. கண்மாய்கள் வறண்டுள்ளன. கள்ளந்திரி கால்வாயிலும் தண்ணீர் வரவில்லை. கிணற்று பாசனம் மூலம் சாகுபடி செய்பவர்களும் வெயில் மற்றும் வறட்சியால் பயிர்கள் பாதிக்கப்படும் என கருதி விவசாயத்தை கைவிட்டனர்.

சிலர் மட்டுமே இருக்கும் தண்ணீரை வைத்து குறைந்த அளவில் சாகுபடி செய்தனர்.கள்ளந்திரியை சேர்ந்த விவசாயி ராஜாமணி தனக்கு சொந்தமான 2 ஏக்கரில் நீண்ட நாள் பலன் தரக்கூடிய வாழை சாகுபடி செய்துள்ளார்.

வாழைக்கு பாய்ச்சும் தண்ணீரை வீணாக்காமல் அதில் ஊடுபயிராக நிலக்கடலையும் சாகுபடி செய்துள்ளார்.விவசாயி ராஜாமணி கூறியதாவது:

  • எனது நிலத்தில் நெல் சாகுபடி செய்வது வழக்கம். கள்ளந்திரி கால்வாய், கண்மாய் மூலம் பாசன வசதி பெறுகின்றன.
  • மழை இல்லை என்றாலும் நிலத்தை காய விடாமல் கிணற்று நீரை வைத்து காய்கறி சாகுபடி செய்வேன்.
  • இந்த ஆண்டு கடும் வறட்சியால் நெல் சாகுபடி செய்யவில்லை. இரண்டு ஏக்கரில் மட்டும் வாழை வைத்துள்ளேன்.
  • வாழை கட்டை ஒன்று ரூ.10, பதியம் செய்வது களை எடுப்பது என ஏக்கருக்கு ரூ. ஒரு லட்சம் வரை செலவானது.
  • இலை முதல் தண்டு வரை அனைத்திற்கும் நல்ல விலை உள்ளது. இதனால் நீண்ட நாள் வருவாயாக ஏக்கருக்கு ரூ. 2.50 லட்சம் லாபம் கிடைக்கிறது.
  • வாழைக்கு வாரம் ஒருமுறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பாய்ச்சும் தண்ணீரை வீணாக்காமல் பயன்படுத்த யோசித்தபோது அதில் ஊடுபயிராக கடலை சாகுபடி செய்ய முடிவு செய்தேன்.
  • இதற்கு ஏக்கருக்கு 50 கிலோ கடலை விதை பயன்படுத்தினேன். தனியாக செலவு செய்யவில்லை. தண்ணீர் செலவும் குறைவு. இப்போது மகசூல் அதிகம் கிடைக்கிறது, என்றார்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *