வாழையில் சூறை காற்று சேதங்களை தடுப்பது எப்படி?

வாழைத்தோட்டங்களை சுற்றிலும் ‘சுங்குனியானா’ ரக சவுக்கு மரக்கன்றுகளை நடுவதால் காற்றில் மரங்கள் சேதமாவதை தடுப்பதுடன் உபரி வருவாய் கிடைக்கும்”, என்று சென்டெக்ட் அறிவியல் மையத்தலைவர் மாரிமுத்து அறிவுறுத்தியுள்ளார்.மாவட்டத்தில் 15 ஆயிரம் ஏக்கரில் ‘திசு’ வாழையும், 5 ஆயிரம் ஏக்கரில் பிற ரக வாழையும் பயிரிடப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன் கம்பம் பள்ளத்தாக்கு, சின்னமனுர் பகுதியில் வீசிய சூறைக்காற்றால், அறுவடைக்கு தயாராக இருந்த 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து விழுந்தன.

பத்து மாதங்களாக பாதுகாத்த வாழை மரங்கள் ஒரு சில நிமிடம் வீசிய சூறைக்காற்றில் சேதமடைந்ததால் விவசாயிகளுக்கு பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது.

காற்று வீச்சில் வாழை மரங்கள் சேதமடையாமல் தடுப்பது குறித்து சென்டெக்ட் அறிவியல் மைய தலைவர் மாரிமுத்து கூறியதாவது:

  • விவசாயிகள் வரப்பை சுற்றி அகத்தி, சித்தகத்தியை உயிர்வேலியாக அமைக்கின்றனர்.
  • இந்த வேலியால் காற்றின் மேலடுக்கில் இருந்து வரும் காற்றின் வேகத்தில் ஏற்படும் சேதத்தை தடுக்க முடியாது.
  • சுங்குனியானா ரக சவுக்கை நடவு செய்வதன் மூலம் காற்றினால் வாழைமரம் சேதமாவதை தடுக்க முடியும்.
  • கடைசி உழவுக்கு பின் வரப்பின் உள்பக்கம் சவுக்கு கன்று நடவு செய்ய வேண்டும்.
  • ஒரு மீ., இடைவெளியில் அடுத்த வரிசையை போல நடவேண்டும். பின் இரண்டு மீ., இடைவெளியில் பெருக்கல் குறி போல நட வேண்டும்.
  • வாழை மரங்கள் காற்றின் வேகத்தில் சேதமாவதை தடுப்பதுடன் உபரி வருவாயும் கிடைக்கும், என்றார்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “வாழையில் சூறை காற்று சேதங்களை தடுப்பது எப்படி?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *