வாழையில் மஞ்சள் இலைப்புள்ளி நோய்

மஞ்சள் இலைப்புள்ளி நோய்: 
தாக்குதலின் அறிகுறிகள்:

 • வாழையில் ஆரம்பத்தில் இலையின் மேற்புறத்தில் சிறு சிறு வெளிர் மஞ்சள் நிற அல்லது பச்சை நிற புள்ளிகள் தோன்றும்.
 • இப்புள்ளிகள் பின்‌‌‌‌‌பு விரைந்து நீள் வடிவத்தில் பழுப்‌‌பு நிறப் பெரும் புள்ளிகளாக மாறுகின்றன.
 • பின்பு இப்புள்ளிகளின் மையப்பகுதி வெளிர் சாம்பல் நிறமும் அதைச் சுற்றிலும் மஞ்சள் நிற குழி‌ப்பகுதி‌யும் தோன்றும்.
 • இச்‌ சிறு சிறு புள்ளிகள் ஒன்று சேர்ந்து இலை முழுவதும் பரவுகிறது. பின் இவை காய்ந்து இலை முழுவதும் வாடிவிடும். இதனால் ஒளிச்சேர்க்கை பாதிக்கப்பட்டு வளர்ச்சி பெரிதும் தடைபடுகிறது.
 • விரைவில் இலைகள் காய்தல் மற்றும் இலை உதிர்தல் இந்நோயின் முக்கிய அறிகுறி.
 • பொதுவாக குலை தள்ளும் சமயத்தில் 15-18 இலைகள் மரத்தில் இருப்பது அவசியம். ஆனால் இச்சிகாடகா இலைப்புள்ளி நோயின் விளைவாக வெறும் 15 இலைகள் இருப்பதே அரிதாகிவிடும்.
 • நோய்த்தாக்கம் அதிகம் இருப்‌பின் குலைகள் சிறுத்தும், கோணலாகவும் தென்படும்.இதனால் மரத்தில் காய் பிஞ்சிலேயே பழுத்து விடுகிறது.
வெளிர் மஞ்சள் அல்லது பச்சை நிற புள்ளிகள்நீள் வடிவத்தில் பழுப்‌‌பு நிறப் பெரும் புள்ளிகள்காய்ந்து இலைசிறியதாய் பழங்கள்
நோய்க்காரணி:

 • இந்நோய் மைக்கோஸ்போரைல்லா மியூசிக்கோலா எனும் பூஞ்சையின் கொனிடியா மற்றும் கொனிடய தாங்கிகளால் பரவுகிறது.
 • கொனிடய தாங்கிகள் பாட்டில் வடிவத்தில்‌ கொனிடியாக்களைத் தாங்கிக் கொண்டிருக்கும். கொனிடியாக்கள் பல தடுப்பு இழைகளைக் கொண்டதாக, குறுகியவையாக இருக்கும்.
 • வித்துக் க‌லவைகள் அடர்‌‌ ‌பழுப்பு நிறத்தில், கருமை நிறத்தில், துளைகளுடன் காணப்படும்.
 • அஸ்கோஸ்போர்கள் ஒற்றை இழைகளைக் கொண்டவை. நிறமற்றவை மேற்புற செல்கள் ‌சற்று அகலமாக, எலிப்சாய்டுடன் காணப்படும்.
 • இந்நோய் பரப்பும் கிருமியின் ‌கொனிடியாக்கள் காற்று நீர் மற்றும் உலர்ந்த நோய்த் தாக்கப்பட்ட இலைகளினால் பரவுகின்றது.
 • இந்நோய் நிழற்பாங்கான பகுதிகளிலும், வளம் குன்றிய மண் வகைகளிலும் அதிகம் பரவுகின்றது.
 • நெருக்கமான நடவு, மண்ணில் அதிகக் களைகள் மற்றும் வடிகால் வசதியில்லாத மண் ஆகியவை இந்நோய்த் தாக்குதலைத் தீவிரப்படுத்தும். நோய்க்காரணிப் பூஞ்சாணம் இலையின் அடிப்பாகத்திலுள்ள நுண்ணிய துளைகளின் மூலம் பரவுகிறது.
மைக்கோஸ்போரைல்லா மியூசிக்கோலாகொனிடியா
கட்டுப்படுத்தும் முறை:
உழவியல் முறை:

 • நோய்த் தாக்கப்பட்ட இலைக‌ளை அகற்றி அழிக்கவும்.
 • இடைக்கன்றுகள், களைகளை அவ்வப்போது நீக்கி சுத்தமாக வைக்கவும்.
 • நெருங்கிய இடைவெளி, குறைந்த நடவு முறையைத் தவிர்க்கவும்.
 • சரியான வடிகால் வசதி அமைப்பதால் வயலில் நீர்தேங்காமல் தடுக்கலாம்.

இரசாயனமுறை

 • போர்டக்ஸ் கலவை 1% + ஆலிவித்து எண்ணெய் 2 % சேர்த்துத் தெளிக்கவும்.
 • காப்பர் ஆக்ஸிகுளோரைடு அல்லது ஜினப் மருந்தினை எரிபொருள் எண்ணெய் அல்லது வெள்ளை எண்ணெயுடன் சேர்த்து தெளிக்கவும்.
 • கார்பென்டஸிம் 0.1% அல்லது புரப்பிகோனஸோல் 0.1% அல்லது மேன்கோ‌‌‌‌ஷெப் 0.25% அல்லது காலிக்ஸின் 0.1% ஏதேனும் ஒரு மருந்துடன் ஒட்டுந் திரவமான டிப்பால் சேர்த்து 10-15 நாட்கள் இடைவெளியில் அறிகுறிகள் ஆரம்பித்ததிலிருந்து இலையின் அடிப்பகுதி‌யில் கரும்புள்ளிகள் தெரிந்த நாளிலிருந்து 3 முறை தெளித்து வரவேண்டும்.
Content Validator: Dr. G.Thiribhuvanamala, Assistant professor, Department of fruits, HC&RI, TNAU, Coimbatore-641003.
Source of Plate:
M.S.Ambawade and G.R.Pathade. 2015. Isolation, characterization and ultra structure of Mycosphaerella musicola-etiological agent of yellow sigatoka isolated from banana. International journal of current microcbiologu and applied sciences. Vol 4 (1), pp.659-671.
source of microscopic image:
J.Henderson and K.Grice. 2008. Mycosphaerella spp. Causing leafspot disease on bananas. Advanced Methods Supplement.  Unviersity of Queensland, pp 16.

நன்றி: தமிழ்நாடு வேளாண் பல்கலை கழகம்

பசுமை தமிழகம் மொபைல் ஆப் இங்கே டவுன்லோட் செய்யவும்

Related Posts

வாழை சாகுபடி டிப்ஸ் கற்பூரவல்லி வாழைஏக்கருக்கு செலவு போக நிகர வருமான...
வாழையில் ஊடுபயிராக தக்காளி ரிஷிவந்தியம் அடுத்த கடம்பூர் பகுதியை சேர்ந்தவர்...
திசு வாழை சாகுபடி விருத்தாசலம் பகுதியில் திசு வளர்ப்பு வாழையான கிராண...
வாழை விவசாயிகளுக்கு அதிக வருமானம் தரும் அடர்நடவு…... வாழை விவசாயிகளுக்கு பெரும்பிரச்னையே... திடீர் தாக்...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *