வாழையில் வாடல் நோய்

வாழையில் ஏற்படும் வாடல் நோயைக் கட்டுப்படுத்த தோட்டக்கலைத் துறை அதிகாரி ஆலோசனை தெரிவித்துள்ளார். இது குறித்து தோட்டக்கலை துணை இயக்குனர் மணிமொழி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

  • கடலூர் மாவட்டத்தில், சாகுபடி செய்யப்பட்டுள்ள வாழையில் குறிப்பாக நாடு மற்றும் ஏலக்கி ரகங்களில் புதிய வகை வாடல் நோய் தாக்குதல் காணப்படுகிறது.
  • நோய் தாக்கப்பட்டு குலை தள்ளும் நிலையிலுள்ள வாழை மரங்களில் இலைகள் பழுத்து காணப்படும்.
  • வாழை மரத்தைத் தொட்டவுடன் இற்றுப்போய் சாய்ந்து விடும்.
  • தாக்கப்பட்ட மரங்களை வேருடன் அகற்றிவிட்டு குழிகளில் 50 கிராம் வீதம் பிளீச்சங் பவுடர் தூவ வேண்டும்.
  • அருகாமையிலுள்ள மரங்களுக்கு ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் பிளீச்சிங் பவுடர் என்ற அளவில் கலந்து மரத்தைச் சுற்றி ஊற்ற வேண்டும்.
  • இந்த நோய் விரைவில் பரவும் தன்மையுள்ளதால் வாழை விவசாயிகள் தனி கவனம் செலுத்தி நோயை கட்டுப்படுத்த வேண்டும்.
  • மேலும், விவரங்களுக்கு அருகாமையிலுள்ள தோட்டக்கலை துறை, வட்டார மையங்களில் களப்பணியாளர்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

நன்றி:தினமலர்

பசுமை தமிழகம் மொபைல் ஆப் இங்கே டவுன்லோட் செய்யவும்

Related Posts

வாழையில் அறுவடை பின்சார் தொழில்நுட்பங்கள்...  சீப்புகளை பிரித்தல்வாழையில் குலையின...
அதிக வருவாய் தரும் நாட்டு வாழை... ரசாயன நச்சு உரங்கள் கலக்காமல் இயற்கை உரங்கள் கொண்ட...
திசு வாழை சாகுபடி விருத்தாசலம் பகுதியில் திசு வளர்ப்பு வாழையான கிராண...
வாழை சாகுபடி டிப்ஸ் – II பழுக்காத வாழை இலையை பெரிய கலனில் / பாத்த...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *