வாழையை தாக்கும் நோயை கட்டுப்படுத்த..

“கூடலூர், பந்தலூர் பகுதிகளில் வாழையை தாக்கும் நோயை கட்டுப்படுத்த, “பஞ்சகாவ்யா, தசக்காவ்யா’ மருந்தை பயன்படுத்த வேண்டும்’ என, தோட்டக்கலை துறை அறிவுறுத்தி உள்ளது.

கூடலூர் தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

  • சமீபத்தில் எதிர்பாராத வகையில் காற்றுடன் பெய்த மழையில் வாழை பாதிக்கப்பட்டுள்ளது.
  • தற்போது, வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்பதால், நோய் பரவும் அபாயமும் உள்ளது.
  • இதனை கட்டுப்படுத்த இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட “பஞ்சகாவ்யா மற்றும் தசகாவ்யா‘ ஆகியவற்றை தனித்தனியாக, 300 மில்லி லிட்டர் அளவில், 10 லிட்டர் தண்ணீருடன் கலந்து, 15 நாட்கள் இடைவெளி விட்டு தெளிக்க வேண்டும்.
  • முதலில், தசகாவ்யா மருந்தையும், 15 நாட்கள் இடைவெளி விட்டு, பஞ்சக்கவ்யா மருந்தையும் தெளிக்க வேண்டும்.
  • விவசாயிகளுக்கு தேவையான, பஞ்சகாவ்யா, தசக்காவ்யா மருந்துகள், தேவாலா பண்ணையில் வினியோகிக்கப்படுகிறது.
  • பஞ்சகாவ்யா லிட்டர் 90 ரூபாய்க்கும், தசக்காவ்யா லிட்டர் 100 ரூபாய்க்கும் கிடைக்கும்.
  • மேலும், விபரங்களுக்கு கூடலூர் தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நன்றி: தினமலர்

பசுமை தமிழகம் மொபைல் ஆப் இங்கே டவுன்லோட் செய்யவும்

Related Posts

வாழையில் ஊடுபயிராக கத்திரி சாகுபடி... கோபி பகுதியில் வாழையில் ஊடுபயிராக கத்திரி சாகுபடி ...
வாழையில் ஊடுபயிராக வெள்ளரி கோபி சுற்று வட்டாரத்தில் வாழையில் ஊடுபயிராக பயிரிட...
வாழையில் வாடல் நோய் கட்டுப்படுத்த வழிமுறை... வெயில் காலத்தில் வாழையில் "பனாமா' வாடல் நோயை கட்டு...
வாழைக்கு இலைவழி நுண்ணூட்டங்கள்... வாழையானது தமிழகம் முழுவதும் சாகுபடி செய்யும் பழப் ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *