வாழை சாகுபடி லாப கணக்கு

காட்டாகொளத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட திம்மாவரம் ஊராட்சியில், விவசாயம் அதிகளவில் மேற்கொள்ளப்படுகிறது. இங்குள்ள விவசாயிகள், காய்கறி பயிர்களுடன் தற்போது, குறைந்த செலவில் அதிக லாபம் தரும், வாழை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து, அப்பகுதி விவசாயி மனோகரன் கூறியதாவது:

 • எனக்கு சொந்தமான, 2.88 ஏக்கர் நிலத்தில், கற்பூர வாழை சாகுபடி செய்துள்ளேன்.
 • இதற்காக, முதற்கட்டமாக, ஏக்கருக்கு, 5,000 ரூபாய் செலவில், தொழுஉரம் மற்றும் ரசாயன உரங்களை நிலத்தில் கொட்டி, நன்கு உழுது பக்குவபடுத்தினேன்.
 • பின்னர், ஒரு வாழைக் கன்று, 15 ரூபாய் வீதம், 24 ஆயிரம் ரூபாய் செலவில், 1,600 வாழைக் கன்றுகளை வாங்கி நடவு செய்துள்ளேன்.
 • இவைகள் தற்போது, சிறப்பாக வளர்ந்து வருகின்றன.
 • 10 மாதங்கள் வரை, பக்கவாட்டில் வளரும் கன்றுகளின் இலைகளை அறுவடை செய்து, விற்பனை செய்யலாம்.
 • மாதம் ஒருமுறை, களை எடுத்து, தேவையான நீர் பாசனம் அளிக்க வேண்டும்.
 • களை மற்றும் உரச்செலவு என, ஏக்கருக்கு 15 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும். வாழை மரங்கள், 12 மாதங்களுக்கு பிறகு, குலை தள்ளும்.
 • ஒரு வாழை குலையில், 15 முதல் 17 சீப்புகள் வரை கிடைக்கும்.
 • ஒரு வாழை குலை, 200 முதல் 250 ரூபாய் வரை விற்பனையாகும்.
 • அனைத்து செலவுகளும் போக, ஏக்கருக்கு, 75 ஆயிரம் ரூபாய் வரை லாபம் கிடைக்கும்.
 • நீர் பாசனத்திற்கு, சொட்டு நீர் பாசன கருவிகளை, மானிய விலையில் பெற்று, பொருத்தி உள்ளதால், குறைந்த நீர் பாசனம் மற்றும் குறைந்த செலவில், அதிக லாபம் பெற முடியும்.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

நன்றி: தினமலர் 

Related Posts

வாழையில் ஊடுபயிராக செண்டுமல்லி!... கோபி சுற்று வட்டாரத்தில் கிணற்று பாசனத்தில் வாழ...
வாழையில் நோய்களை சூடோமோனஸ் மூலம் கட்டுபடுத்துவது எப்படி... ஸ்ரீவைகுண்டத்தில் வாழை விவசாயிகளுக்கு கிள்ளிகுளம் ...
வாழை மகசூலைத் தடுக்கும் இலைப்புள்ளி நோய்... கன்னியாகுமரி மாவட்டத்தில், வாழை மகசூலைத் தடுக்க...
தொடர் மழையில் இருந்து வாழையை காப்பது எப்படி?... தொடர் மழையால் பெருக்கெடுத்த தண்ணீர் தங்கி நிற்பதால...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *