வாழை நுண்ணூட்ட ஸ்பெஷல்

வாழை நுண்ணூட்ட ஸ்பெஷலானது பெங்களூரு தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தின் ஆராய்ச்சியில் உருவான தொழில்நுட்பமாகும். இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி தேனி மாவட்டம் காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் வாழை நுண்ணூட்ட ஸ்பெஷல் தயாரிக்கப்படுகிறது.

Courtesy: Dinamalar
Courtesy: Dinamalar

பயன்கள் :

  • நுண்ணூட்ட குறைபாடு உடனே நிவர்த்தியாகிறது. உரத்தின் பயன்பாடு குறைகிறது.
  • பயிரின் வளர்ச்சி துரிதப்படுத்தப்படுகின்றது. நல்ல தரமான பெரிய வாழை குலை கிடைக்கிறது.

வாழை நுண்ணூட்ட ஸ்பெஷல் உபயோகிக்கும் முறை:

  • வாழை நுண்ணூட்ட ஸ்பெஷல் 50 கிராம், ஒரு ஷாம்பு பாக்கெட் மற்றும் ஒரு எலுமிச்சை பழத்தின் சாறு ஆகியவற்றை 10 லிட்டர் தண்ணீர் கலந்து பயன்படுத்த வேண்டும்.
  • வாழை நட்ட ஐந்தாவது, ஆறாவது, ஏழாவது, எட்டாவது, ஒன்பதாவது மற்றும் பத்தாவது மாதங்களில் வாழை நுண்ணூட்ட ஸ்பெஷலை தெளிக்க வேண்டும்.
  • வாழை குலை தள்ளிய பின்பு முதல் மற்றும் இரண்டாவது மாதத்திலும் குலைகளின் மேல் தெளிக்க வேண்டும்.
  • இந்த வாழை நுண்ணூட்ட ஸ்பெஷலை பூச்சிக்கொல்லி மருந்துடன் சேர்த்தும் தெளிக்கலாம். தாமிரம் கலந்த பூஞ்சாணக்கொல்லி மருந்துடன் மட்டும் கலந்து தெளிக்க கூடாது.
  • வாழை நுண்ணூட்ட ஸ்பெஷல் கரைசலை காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் 6.30 மணி வரையிலும் தெளிக்க சிறந்தது.
  • இலையின் அடிப்பகுதி முழுவதும் நனையும்படி தெளிக்க வேண்டும். குலைகள் முழுவதும் நனையும்படி தெளிக்க வேண்டும்.

காலாவதி நாள் : உற்பத்தி நாளிலிருந்து 1 வருடம் வரை
அளவு : 1 கிலோ
விலை : ரூ. 125
இந்த வாழை நுண்ணூட்ட ஸ்பெஷலை சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் ப.மாரிமுத்துவை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம். (அலைபேசி : 09442025109)

நன்றி: தினமலர்

பசுமை தமிழகம் மொபைல் ஆப் இங்கே டவுன்லோட் செய்யவும்

Related Posts

வாழை நாரை எளிதாக பிரித்தெடுக்க புது முறை... அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (...
மொந்தன் ரக கறிவாழை மொந்தன் ரக கறி வாழை சாகுபடி பற்றி அனுபவங்களை திருவ...
வாழை மகசூல் பெருக “வாழை சக்தி”... தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனம் (National Research C...
வாழையில் அதிகம் லாபம் பெறுவது எப்படி வீடியோ... வாழையில் அதிகம் லாபம் பெறுவது எப்படி -  வீடியோ  ...

One thought on “வாழை நுண்ணூட்ட ஸ்பெஷல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *