தூத்துக்குடியில் விதை பரிசோதனை மையம்

தூத்துக்குடியில் உள்ள விதை பரிசோதனை மையத்தில் விதையின் தரத்தினை பரிசோதனை செய்து கொள்ளலாம் என்று வேளாண்மை அதிகாரி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி விதை பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் நெடுஞ்செழியன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது;

  • ஒரு விதையின் ஈரப்பதம் என்பது மிக முக்கியமான காரணியாகும்.அது விதையின் தரத்தையும், அந்த விதையினை எத்தனை காலம் தரமாக சேமிக்க முடியும் என்பதையும் நிர்ணயம் செய்கிறது.
  • விதையின் ஈரப்பதத்தினை அறிந்து கொள்ள தங்கள் விதைக்குவியலில் இருந்து அந்த குவியலை பிரதிபலிக்கின்ற வகையில் 100 கிராம் அளவு மாதிரி எடுத்து 700காஜ் பாலித்தீன் பைகளில் போட்டு காற்று அல்லது நீராவி புகாத வண்ணம் எலக்ட்ரிக் சீலரிலோ அல்லது மெழுகுவர்த்தி வெப்பம் மூலமாக நன்றாக சீலிட வேண்டும்.
  • அந்த விதை மாதிரியை 30 ரூபாய் செலுத்தி தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ஆபிஸ் வளாகத்தில் உள்ள வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்தில் இயங்கி வரும் மாவட்ட விதை பரிசோதனை நிலையத்தில் கொடுத்து விதை ஈரப்பதத்தினை அறிந்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

நன்றி: தினமலர்

Related Posts

கோபுர கலசங்களில் நவதானியங்கள் ஏன்?... கும்பாபிேஷகத்தின் போது கோபுரகலசங்களில் கட்டப்படு...
விதை மூலமாகப் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்தும் விதை நேர்த்தி... விதை மூலமாகப் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த வ...
நெல் அறுவடையில் விதையை சேமிப்பது எப்படி?... நெல் அறுவடையின்போது விதை சேமிப்பு அம்சங்கள் கு...
காய்கறி விதைகள் விற்பனை பெரியகுளம் தோட்டக்கலைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி ந...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *