விதையை காய வைப்பது எப்படி?

விதையை காய வைப்பதின் அவசியம் குறித்து வேளாண் அதிகாரி யோசனை தெரிவித்துள்ளார்.

விதையை காயவைப்பது என்பது விதையின் ஈரபதத்தை பாதுகாப்பான ஈரப்பதம் வரும்வரை காயவைப்பது ஆகும்.

 • ஒவ்வொரு விதைக்கும் அதன் தன்மை, சேமிப்பின் நோக்கம், சேமிக்க பயன்படுத்தப்படும் பைகளைப் பொறுத்து பாதுகாப்பான ஈரப்பதம் வேறுபடும்.
 • விதையை காயவைப்பது விதையினை உயிருடனும் நல்ல வீரியமுடனும் சேமிக்க முக்கிய காரணமாகும். இல்லையெனில் சீக்கிரமே பூஞ்சானங்களாலும், வெப்பத்தினாலும் மற்றும் அதிக நுண்ணுயிர் தாக்குதலாலும் கெடுகிறது.
 • விதைகளை இரண்டு முறையில் நாம் காயவைக்கலாம். ஒன்றாவது சூரிய ஒளியில் நல்ல சிமிண்ட் தளத்தில் காயவைப்பது, இரண்டாவது இயந்திரங்கள் மூலம் சுடுகாற்றை விதை கலங்களில் அனுப்பி காயவைப்பது.
 • விதையை அறுவடை முடிந்த உடன் காயவைத்து பாதுகாப்பான ஈரப்பதத்திற்கு கொண்டுவந்து சேமிக்க வேண்டும்.
 • ஒன்று அல்லது இரண்டு மாதம் கழித்து காயவைக்கம் போது அறுவடை சூட்டுடன் மூடையிட்டதால் விதைகள் கெட்டியாகி அடைகளாக மாறியிருக்கும்.
 • நிறம் மங்கி இருக்கும், முளைப்புத்திறன் குறைந்திருக்கும். பொதுவாக விவசாயிகள் சூரிய ஒளியில்தான் விதைகளை காயவைக்கிறார்கள்.

  விதைகளை காயவைக்கும் போது சில முன்னெச்சரிக்கை நடவடிக்கையை நாம் மேற்கொள்ள வேண்டும்.

 

 • ஒன்றாவது ஈரமான அழுக்கான மண்களத்தில் போடக்கூடாது.
 • இரண்டாவது களத்தில் ஒரே வயலில் இருந்து பெறப்பட்ட ஒரே பயிர் ஒரே ரகத்தைதான் ஒரு நேரத்தில் கையாள வேண்டும்.
 • மூன்றாவது உச்சி வெயிலில் விதைகளைகாய போடகூடாது. அந்த நேரத்தில் விதைகளை குவித்து தார்பாய் போட்டு மூடிவைக்க வேண்டும்.உச்சி வெயிலில் உள்ள புற ஊதா கதிர்கள் முளைப்புதிறனை பாதிக்கும்.
 • நான்காவது விதைகளை அதிகமாக காயவைக்கக் கூடாது.விதை மணிகளில் வெடிப்பு ஏற்பட்டு கருசிதைவு ஆகி முளைப்புதிறன் பாதிக்கும்.

இதனை கருத்தில்கொண்டு விதைப்பயிர் விவசாயிகள், உற்பத்தியாளர்கள் விதைகளை காயவைப்பதில் தனி அக்கறை காட்ட வேண்டும் என தூத்துக்குடி விதை பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் கலைச்செல்வி மற்றும் நெடுஞ்செழியன் தெரிவித்துள்ளனர்.

நன்றி: தினமலர்

Related Posts

பரம்பரிய விதைகள்! கிராமங்களைச் சேர்ந்தவர்கள் விதைகளைக் காசு கொடுத்து...
பாரம்பரிய விதைகளை சேர்த்து வரும் குருசுவாமி... கர்நாடகாவில் உள்ள சமரஜநகர் மாவட்டத்தில் உள்ள ஒடையா...
நிலக்கடலை விதை நேர்த்தி நிலக்கடலையில் உயிருள்ள விதைகளை எளிய முறையில் பிரித...
நாட்டு விதைகளை காப்பாற்றுவதின் முக்யத்துவம்... பசுமை புரட்சி ஆரம்பித்த இருவது ஆண்டுகளுக்கு முன், ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *