விதை மூட்டைகளை பாதுகாப்பது எப்படி

விதைகள் காற்றிலுள்ள ஈரப்பதத்தை கிரகிக்கும் தன்மையுடையவையாதலால், காற்றின் ஈரத்தன்மை அதிகமுள்ள கடலோரப் பகுதிகள் மற்றும் நதி கரைகளில் விதைகளை சேமித்திட ஈரக்காற்று புகாபைகளையே உபயோகிக்க வேண்டும்.

இதுகுறித்து விதை ஆய்வு துணை இயக்குநர் நாராயண பிரசாத் கூறியதாவது:

  • விதைகளை கிடங்குகளில் சேமித்து வைக்கும் போது சாக்குப் பைகளை ஒன்றின் மேல் ஒன்றாக வைக்கும்போது 6 அல்லது 7 வரிசைக்கு மேல் அடுக்க வேண்டாம்.ஏனென்றால் மேலே உள்ள மூட்டைகளின் பாரம் அடியிலுள்ள மூட்டைகளைப் போட்டு அழுத்துவதால் அடி மூடையிலுள்ள விதைகளின் முளைப்புத்திறன் பாதிக்க வாய்ப்புள்ளது.
  • விதை மூடைகளை வெறும் தரையின் மீது அடுக்கி வைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
  • அதே போல் சுவற்றின் மீது சாய்த்து அடுக்குதலையும் தவிர்க்க வேண்டும். இதனால் தரை மற்றும் சுவர்களில் உள்ள ஈரப்பதம் ஊடுருவி அவற்றைப் பாதிப்பதைத் தடுக்கலாம்.
  • எப்பொழுதும் விதை மூடைகளை மர அட்டகங்கள் அல்லது தார்ப்பாய் விரித்து அதன் மீது அடுக்கி வைக்க வேண்டும்

நன்றி: தினமலர்

Related Posts

வேளாண் அறிவியல் நிலையத்தில்மா கன்றுகள், விதைகள் விற்பனை... மா கன்றுகள், சம்பங்கி விதை கிழங்கு ரகங்கள் ஆ...
மரபணு வாய் பூட்டு சட்டம்! மத்ய அரசாங்கம், ஒரு புதிய சட்டம் கொண்டு வர முயற்ச...
விதை காய வைப்பது எப்படி விதையை காயவைப்பது என்பது விதையின் ஈரபதத்தை பாதுகாப...
சந்திப்பு: பாரம்பரிய விதைகளின் பாதுகாவலன் செந்தில்நாயகம்... காய், கனிகள், தானியங்கள், மூலிகைகள், மரங்கள் என நூ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *