தைல மரக்கன்றுகளை நட மக்கள் எதிர்ப்பு

தைல மரங்களும் கருவேல மரங்களும் நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்கின்றன என எத்தனையோ முறை ஆராய்ச்சிகளும் நிபுணர்களும் கூறி விட்டனர்.கேரளத்தில் கருவேல மரங்களை அறவோடு வெட்டி எடுக்க ஒரு இயக்கமே நடத்தி வெற்றி கொண்டனர். தமிழ்நாட்டில் இப்போதும் தைல மரங்களை நடுவதில் எனோ அப்படி ஒரு பிரியம். ஏன் வறட்சியான கலர் மண்ணிலேயே வளரக்கூடிய மரங்களான முருங்கை, வேம்பு, அரசம் போன்ற மரங்களை நாட கூடாதா? இவற்றினால் மண் வளமும் மாறும்,சிறிய பறவைகளும் வாழ தொடங்கும்..

மக்களே இந்த விஷயத்தை கையில் ஏந்தினால் தான் உண்டு. அரசாங்க இயந்திரத்தை எதிர்கொள்ள. இப்படி ஒரு செய்தி தின மணியில் இருந்து…

தைல மரக்கன்றுகளை நட மக்கள் எதிர்ப்பு

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், குலமங்கலம் கிராமத்தில் வனத் துறைக்குச் சொந்தமான  இடத்தில் தைல மரகன்றுகளை நடவு செய்ய வந்த வனத் துறையினர் அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக திரும்பிச் சென்றனர்.

திருமயம் வட்டம், குலமங்கலம் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான 50 ஏக்கர் பரப்பளவில் தைல மரக்கன்றுகளை நடுவதற்காக வியாழக்கிழமை சென்றனர்.

தகவலறிந்த அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து  தைல மரக்கன்றுகளை நடுவதற்கு பதிலாக பலன் தரும் மரக்கன்றுகளை நட வேண்டுமென வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து விவசாயிகள் சங்க நிர்வாகி ராமதீர்த்தார் கூறியது:

தைல மரக்கன்றுகள் நடுவதால் அதைச் சுற்றி உள்ள பாசனக் குளங்களில் உள்ள நீர் உறிஞ்சப்படுகிறது.

மேலும் வனத்துறையினர் 4 அடி உயரத்துக்கு மழை நீர்  வெளியேறாத வகையில் ஆங்காங்கே தடுப்பணைகளை அமைத்துள்ளனர். அவற்றை அப்புறப்படுத்த வேண்டும்.

குளங்களுக்கு நீர்வரத்து இல்லாமல் விவசாயம் செய்வதற்கும் குடிப்பதற்கும் தண்ணீரின்றி விவசாயிகளும் பொதுமக்களும் சிரமப்படும் நிலை உருவாகியுள்ளது. எனவே, தைல மரக்கன்றுகளை நடும் நடவடிக்கையை மாவட்ட ஆட்சியர் தடுக்க வேண்டும் என்றார்.

தகவலறிந்த பனையப்பட்டி போலீஸார், வனத்துறை அதிகாரிகள் மக்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் வனத்துறையினர் தைல மரக்கன்றுகளை நடாமல் திரும்பிச் சென்றனர்.


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *