மானாவாரி நிலத்திலும் நல்ல மகசூலுக்கு டிப்ஸ்

மழையை மட்டுமே நம்பி சாகுபடி செய்யப்படும் மானாவாரி விவசாயத்தில், சில நவீன யுக்திகளை கையாண்டு, நல்ல மகசூல் எடுக்கலாம் என, வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர்.

கோபி வேளாண் உதவி இயக்குனர் பொறுப்பு ஆசைத்தம்பி கூறியதாவது:

 • தமிழகத்தில், 52 விழுக்காடு நிலம் மானாவாரியாக உள்ளது. மானாவாரியில் நிலக்கடலை, எள், சூரியகாந்தி, ஆமணக்கு, சோளம், கம்பு, ராகி, பருத்தி மற்றும் பயறு வகைகளான உளுந்து, துவரை, பாசிப்பயறு, தட்டை போன்றவை பெரும்பாலும் சாகுபடியாகிறது.
 • சிறு விவசாயிகளின் நிலங்கள் பெரும்பாலும் மானாவாரி சாகுபடியில் தான் உள்ளது. உரிய காலத்தில் மழை பெய்யாததாலும், தேவையான அளவு மழை கிடைக்காததாலும் மானாவாரி பயிர்களில் மகசூல் பெரிதும் பாதிப்படைகிறது.
 • சில நவீன தொழில்நுட்பங்களை கடைபிடித்தால் நல்ல மகசூல் பெற முடியும்.
 • மானாவாரி நிலங்களில் சராசரி மழையளவு ஆண்டுக்கு, 600 மி.மீ., முதல், 800 மி.மீ., வரை உள்ளது.
 • 35 முதல் 40 நாட்களில் மழை பெய்து முடிந்து விடுகிறது. சில ஆண்டுகளில் மழை பொய்த்து விடுகிறது.
 • சில உழவியல் முறைகள் மூலம் பெய்யும் மழையை மண்ணில் தங்க வைத்து பயிருக்கு பயன்படுத்த இயலும்.
 • வயல் அமைந்துள்ள சரிவுக்கு குறுக்கே உழவு செய்வதால் மழை நீர் சால்களில் தேங்கி நின்று, மண்ணின் அடிப்பகுதிக்கு சென்றடையும்.
 • நிலப்பரப்பில் விழும் மழை நீர் வேகமாக வழிந்து விடாமல் நிதானமாக செல்வதால் மண்ணில் அதிக நீர் ஈர்க்கப்படும்.
 • மானாவாரி நிலங்களில் மண் ஈரத்தை சேமித்து வைக்க கோடை உழவு மிகவும் அவசியம்.
 • அறுவடைக்கு பின் சட்டிக்கலப்பையால் நிலத்தை ஆழமாக உழவேண்டும்.
 • நீர்ப்பிடிப்பு தன்மை அதிகமாகும். களை கட்டுப்படும். மண் அரிமானம் தடுக்கப்படும்.
 • மானாவாரி நிலங்களில் அங்கக உரங்களான தொழு உரம், கம்போஸ்ட் தென்னை நார்கழிவு உரம் ஊட்டமேற்றிய தொழு உரம் ஆகியவை இடுவதால் மண் ஈரம் காக்கப்பட்டு மண் வளம் மேம்படும்.
 • விதைகளை கடினப்படுத்துவதால், அவை வறட்சியை தாங்கி முளைத்து, நல்ல பயிர் எண்ணிக்கையை கொடுத்து, அதிக மகசூல் கிடைக்கும்.
 • ஒரு கிலோ விதைக்கு, 500 கிராம் சாம்பல், மூன்று சதம் கோந்து என்ற விகிதத்தில் கலந்து, ஐந்து மணி நேரம் நிழலில் காய வைத்து, விதைக்க வேண்டும்.
 • மழைக் காலத்தை சராசரியாக கருத்தில் கொண்டு, மழை பெய்வதற்கு இரண்டு வாரம் முன்பாகவே புழுதி விதைப்பு செய்ய வேண்டும்.

இந்த  வழிமுறைகளை கடைபிடித்து மானாவாரியில் மகசூல்  அதிகரிக்கலாம்

நன்றி: தினமலர்

 

Related Posts

வறுமையை ஒழிக்கும் வழி இதுதானா?... நம் நாட்டின் பொருளாதார மேதை முதல்வரும், திட்ட கமிஷ...
சென்னை அருகே ராட்சச ஆப்ரிக்க நத்தைகள்... கேரளத்தை தாக்கி விவசாயத்தை பாதித்துள்ள ராட்சச ஆப்ர...
வேளாண்மை பற்றிய வானொலி நிகழ்ச்சிகள்... வேளாண்மை பற்றிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பற்றி ஏற...
மாறி வரும் அறுவடை நடைமுறைகள் சேலை முந்தானையை தலைக்கவசமாக கட்டி, பெண்கள் வரிசையா...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *