மானாவாரி மகசூலுக்கு கோடை உழவு அவசியம்

“”மானாவாரி சாகுபடியில் அதிக மகசூல் பெற கோடை உழவு அவசியம்,” என ஒட்டன்சத்திரம் வோளண்மை உதவி இயக்குனர் முத்துராமலிங்கம் தெரிவித்துள்ளார்.

  • ஒட்டன்சத்திரம் பகுதியில் 60 சதவீத வேளாண் மை நிலங்களில் மக்காச்சோளம், சோளம், பருத்தி, பயறு வகைகள் மானாவாரியாக சாகுபடி செய்யப்படுகின்றன.
  • மானாவாரி சாகுபடியில் அதிக மகசூல் பெறுவதற்கு கோடை உழவும் முக்கிய தொழில் நுட்பமாக உள்ளது.
  • ஏப்ரல், மே, ஜூன் ல் செய்யப்படும் கோடை உழவானது அடுத்து பெறப்படும் மழை நீரை ஈர்த்து சேமித்து, விதைக்கபடும் பயிர்கள் வளர்வதற்கு பேருதவியாக அமைகிறது.
  • மேலும் பயிர்களை தாக்கக்கூடிய மண்ணில் தங்கியுள்ள பூச்சிகளின் புழுக்கூடுகளும் உழவு செய்யும் போது வெளியே கொண்டு வரப்பட்டு அவை அழிக்கப்பட்டு விடுகிறது.
  • இதனால் விதைக்கக் கூடிய பயிர்களும் பூச்சி மற்றும் நோய் தாக்குதல்கள் இல்லாமல் ஆரோக்கியமா செழித்து வளர முடிகிறது.
  • எனவே விவசாயிகள் கோடை உழவு அவசியம் செய்ய வேண்டும்.
  • கோடை வெப்பத்தின் பலனை முழுமையாக பயன்படுத்தி நல்ல மகசூல் பெற சட்டிக்கலப்பைகள் கொண்டு ஒரு முறையும், சாதாரண கலப்பைகள் கொண்டு இருமுறையும் உழவேண்டும்

நன்றி: தினமலர்

பசுமை தமிழகம் மொபைல் ஆப் இங்கே டவுன்லோட் செய்யவும்

Related Posts

அறுவடை பணி ஆட்கள் பற்றாக்குறை: நாமே உருவாகிய ஒரு பிரச்னை... ஏற்கனவே இருக்கும் இடுபொருள் விலை ஏற்றம், புதிய பூச...
சுழற்சி முறையில் பயிர் சாகுபடி... விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் ஆண்டு முழுவதும்...
நிலத்தடி நீருக்கு உலைவைக்கும் கருவேல மரங்கள்... வறட்சி நிலவும் ராஜபாளையம் சுற்று வட்டார பகுதிகளில்...
கருவேலங்காடாக இருந்த 140 ஏக்கர் சீரமைத்து விவசாயம்... வெளிநாட்டு மோகத்தை விடுத்து பல ஆண்டுகளாக சீமை கருவ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *