மாடித்தோட்டம் ‘கிட்’ !

வீடுகள் தோறும் மாடித்தோட்டம் அமைக்க தோட்டக்கலைத்துறை 200 ரூபாய் மானியம் வழங்குகிறது. பயனாளிகள் 322 ரூபாய் மட்டும் செலுத்தி மாடித்தோட்டம் ‘கிட்’ பெறலாம்.

Courtesy: Dinamalar

மாடித்தோட்டம் அமைக்க விரும்புவோர் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனரை அணுகி பெயர்களை முன்பதிவு செய்தல் அவசியம்.

இதற்காக ஆதார் கார்டு, ரேஷன் கார்டு நகல் கொடுக்க வேண்டும்.

மாடித்தோட்டம் ‘கிட்’ ஒன்றில் கத்தரி, வெண்டை, கீரை விதை பாக்கெட்டுகள், இயற்கை அடியுரமாக 200 கிராம் அசோஸ்பைரில்லம், 200 கிராம் பாஸ்போபாக்டீரியம், 100 கிராம் டிரிக்கோட்ரம்மா விரிடி, 100 கிராம் சூடோமோனாஸ், 100 மி.லி., அசார்டிராக்டின், ஆறு எண்ணிக்கையில் பாலிதீன் உறைகள், ஒரு கிலோ 18:18:18 யூரியா, சூப்பர்பாஸ்பேட், இரண்டு கிலோ தென்னை நார் கழிவு, தொழில்நுட்ப கையேடு உள்ளிட்டவை வழங்கப்படும். மாடித்தோட்டம் குறித்த செயல்விளக்கம், விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்படும்.

தோட்டக்கலைத்துறை வட்டார உதவி இயக்குனர் அலுவலகத்தில் முன்பதிவு செய்தல் அவசியம்.
தொடர்புக்கு: 09842007125 .


– முனைவர் பா.இளங்கோவன், உதவி இயக்குனர் தோட்டக்கலைத்துறை, உடுமலை.

நன்றி: தினமலர்

பசுமை தமிழகம் மொபைல் ஆப் இங்கே டவுன்லோட் செய்யவும்

Related Posts

சென்னையில் மாடி தோட்டம் பற்றிய பயிற்சி... தமிழ் நாடு வேளாண் பல்கலை கழகம் சென்னையில் நம்பர் U...
மாடிதோட்டம் அமைக்கும் திட்டத்துக்கு அமோக வரவேற்பு... வீட்டு மாடியில் காய்கறித் தோட்டம் அமைக்கும் தி...
வீடுகள் தோறும் காய்கறி தோட்டம்!... வீடுகள் தோறும் காய்கறி தோட்டம் அமைத்து விவசாயத்தில...
மாடித் தோட்டம்: எளிதான கீரை வளர்ப்பு முறை!... மாடித் தோட்டம் போடும்போது எளிதில் வளர்க்கக் கூடியவ...

One thought on “மாடித்தோட்டம் ‘கிட்’ !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *