வீட்டு மாடி தோட்டம் டிப்ஸ்

தினமலர் சார்பில் மதுரை வாப்ஸ் தொண்டு நிறுவனத்தில் பெண்களுக்கான மாடி தோட்டம் அமைப்பது குறித்து இலவச பயிற்சி அளிக்கப்பட்டது.வாப்ஸ் நிறுவன சி.ஓ.ஓ. சோமேஷ்பாபு, தொழில்நுட்ப ஆலோசகர் சுப்ரமணியன் பங்கேற்றனர்.காய்கறி தோட்டம் அமைப்பது குறித்து பயிற்றுனர் நடராஜன் கூறியதாவது:

  • கத்தரி, தக்காளி, பச்சைமிளகாய் விதைகள் சிறிதாக இருப்பதால் அவற்றை குழித்தட்டு டிரேயில் வளர்க்க வேண்டும்.
  • குழிகளில் தேங்காய்நார் துகள்களை சேர்த்து தண்ணீர் ஊற்றி லேசாக விரலால் அழுத்திய இடத்தில் விதைகளை துாவி மேலாக தேங்காய் நார் துகள்களால் மூட வேண்டும். இப்படி 30 நாட்கள் டிரேயில் நாற்றுகளாக வளர்த்து, பெரிய பைகளுக்கு மாற்ற வேண்டும்.
  • மற்ற விதைகளை மண் பைகளில் நேரடியாக துாவி செடியாக வளர்க்கலாம். வசதியிருந்தால் பசுமை குடில் அமைக்கலாம். நஞ்சில்லா உணவுகளை வீட்டில் உற்பத்தி செய்யலாம் என்றார்.

சொட்டுநீர் பாசன பயிற்றுனர் செந்தில்குமார் கூறியதாவது:

  • காய்கறி செடிகள் அதிகபட்சம் ஆறு மாதங்கள் வரை பலன் கொடுக்கும். அதன்பின் பைகளில் உள்ள மண்ணை மாற்றி வேறு விதைகளை நடவேண்டும்.
  • மாடியில் பைகள் வைக்கும் போது துளைகளின் வழியே தண்ணீர் வெளியேறும் போது மாடியில் தேங்கக்கூடாது.
  • சட்டமிடப்பட்ட மரப்பலகைகளில் பைகளை வைத்தால் தண்ணீர் தேங்காமல் வெளியேறி விடும்.
  • மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பைகளை இடம் மாற்றி வைக்க வேண்டும். மண்ணை அதிகப்படுத்தினால் எடை கூடும்.
  • மூன்றில் ஒரு பங்கு மண்ணாகவும், மீதி இரண்டு பங்கு தேங்காய் நார் துகள்களையும் பயன்படுத்துவது நல்லது.
  • சற்றே பெரிய டிரம்களில் மா, கொய்யா, மாதுளை, பப்பாளி, எலுமிச்சை, முருங்கை மரங்களை நடலாம். இலைகளை மட்டுமே பயன்படுத்துவதாக இருந்தால் முருங்கை மரத்தை சிறிய பைகளில் கூட வளர்க்கலாம்.
  • தண்ணீர் இருந்தால் ஆண்டு முழுவதும் காய்கறி பயிர்களில் லாபம் பார்க்கலாம்.
  • கத்தரி, வெண்டை, தக்காளி, செடி அவரை, பீட்ரூட், முள்ளங்கி செடிகளை மாடியில் வளர்க்கலாம், என்றார்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *